புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், குறைவாக உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் உள்ளவர்கள் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆபத்தை குறைக்க ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றினால் குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைந்துவிடும். குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தை ஒழுங்கான வாழ்க்கை முறை, உணவு பழக்கம் போன்றவை போக்கிவிடும் என்று ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 27000 பேரைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வு உலகம் முழுவதும் உள்ள மக்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கலந்துக்கொண்ட 10 சதவிகிதத்திற்கும் குறைவான பேர் தினமும், 5 அல்லது அதற்கு மேல் பழங்கள், காய்கள் சாப்பிட்டுள்ளனர் மற்றும் 25 சதவிகிதம் பேர் மட்டுமே வாரத்தில் 4 நாட்கள் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொண்டவர்கள்
குடல் புற்றுநோய் தடுக்கப்படக்கூடிய ஒரு நோய். உடலில் தக்க மாற்றங்கள் பின்பற்றும் போது குடல் புற்றுநோய்கான ஆபத்து குறைந்துவிடும் என்று கரோல் பர்க் என்ற, ஓஹியோ, கிளீவ்லாண்ட் கிளினிக்கில் உள்ள ஒரு காஸ்ட்ரோநெட்டலாஜிஸ்ட் கூறியுள்ளார். செரிமான நோய்களின் வாரம் 2017 ல் சிகாகோவில் மெக்கார்மிக் பிளேஸில் 6-9 மே மாதத்தில் நடைபெற்றது. இதில் குடல் புற்றுநோயை சரி செய்ய முடியும் என்று கண்டுடிக்க முடியும் என்பது வெளியிடப்பட்டது. பர்க்கும் அவருடன் ஆய்வு மேற்கொண்டவர்களும் குடல் புற்றுநோயால் பாதிக்கப்ட்டவர்கள் அவர்களது உடல் நிலை குறித்து கூறிய தகவல்களைக் கொண்டு இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வு ஒவ்வொருவருக்கும் அவர்களது வாழ்க்கை முறைகளை வைத்தும், உணவு பழக்கங்களை வைத்தும் தனிதனி ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இந்த ஆய்வின் போது அனைவரிடமும் கேட்டப்படும் கேள்விகள் என்றால், வயது, பாலினம், உயரம், எடை, உணவு பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கத்தின் தன்மை, உடல் உழைப்பு, குடும்ப வரலாறு போன்றவற்றை கேட்டு பின்பற்ற வேண்டியவற்றை கூறுவார்கள். இந்த ஆய்வுகளின் முடிவு வெளியிட்டுள்ள குறிப்புகள் என்றால், உடற்பயிற்சி மேற்கொண்டவர்கள், ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கொண்டவர்கள் மற்றும் புகை பிடிக்காதவர்கள் இந்த குடல் புற்றுநோய் ஏற்படவதற்கான அறிகுறியோ ஆபத்தோ இல்லாமல் இருக்கின்றனர் என்பது தான். எனவே, நீங்கள் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மேற்கொண்டு, சிறிது உடற்பயிற்சியை சரியாக மேற்கொண்டு வாழ்ந்தாலே உடலில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாமல் ஆரோக்கியமாக வாழலாம்.