மாதவிடாய் காலத்தில் நீங்க இதை கண்டிப்பா சாப்பிடவே கூடாது!

0
80

மாதவிடாய் காலத்தில் நீங்க இதை கண்டிப்பா சாப்பிடவே கூடாது!

மாதவிடாய் காலங்களில் வலி, மோசமான உடல்நிலை, துர்நாற்றம் போன்ற விஷயங்களையும் பலரும் எதிர்கொள்கிறார்கள். அதுவும் முதல் இரண்டு நாட்களில் யாருமே தங்களுடைய தினசரி வேலைகளை செய்ய முடியாதவாறு வலியை அனுபவிப்பார்கள்.

பெண்களுக்கு மாதவிடாய் காலம் என்பது ஒரு முக்கியமான காலகட்டமாகும். இந்த மாதவிடாய் தான் பெண்களின் கர்ப்பப்பையின் ஆரோக்கியத்தை பற்றி தெரியப்படுத்தும் ஒன்றாக உள்ளது. இந்த காலகட்டத்தில் பெண்கள் இரும்புச்சத்து மிகுந்த உணவுகள், வைட்டமின் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான ஒன்றாகும். அதே சமயத்தில் சில வகையான உணவுகளை சாப்பிடாமல் இருப்பதே சிறந்ததாகும்.

டயட்

மாதவிடாய் காலத்தில் சில உணவுகளை சாப்பிடுவதால் மனநிலை மாற்றம், சோகம் போன்றவை உண்டாகலாம். அல்லது உதிரப்போக்கு அதிகமாகவோ அல்லது உடல் வலியோ உண்டாகலாம். எனவே தான் சில வகையான உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்ப்பது நல்லது. சிவப்பு மிளகு, ஸ்டிராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.

சுத்திகரிக்கப்பட்ட உணவுகள்

இயற்கையான பொருட்களை உண்பது உடலுக்கு நல்லது. ஆனால் அதுவே சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை மாதவிடாய் காலத்தில் உட்க்கொள்வது என்பது கூடாது. பல சுத்திகரிக்கப்பட்ட உணவுகளில் மறைமுகமாக சர்க்கரை கலந்துள்ளது. இது மனமாற்றம், சோகமாக காணப்படுவது போன்ற பிரச்சனைகளைக்கு காரணமாக அமைந்து விடும்.

தவிர்க்க வேண்டியவை

வெள்ளை பிரட், பாஸ்தா, பாக்கெட் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவை, கேக் போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லதாகும்.

கொழுப்பு உணவுகள்

கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் எடுத்துக் கொள்வது என்பது கூடாது. இதில் உள்ள கொழுப்புகள் உங்களுக்கு மார்பகத்தில் வலி, வயிற்று போக்கு, உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை தரலாம். எனவே முடிந்தவரை இது போன்ற உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

சாப்பிட கூடாது

நன்றாக பொரிக்கப்பட்ட உணவுகளான வெங்காய சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், டோ நட்ஸ், பேக் செய்யப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், கொழுப்பு மிகுந்த இறைச்சி, சீஸ், கொழுப்பு மிகுந்த பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

இனிப்பு உணவுகள்

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு கோபம், வெறுப்பு, விரக்தி போன்றவை உண்டாகும். இனிப்பு உணவுகளை எடுத்துக் கொள்வது மாதவிடாய் காலத்தில் இது போன்ற உணர்ச்சிகளை அதிகரிக்கும். எனவே இது போன்ற உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்ப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here