உலகின் பெரிய ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.. நாசாவால் முடியாததை முடித்த தனியார் நிறுவனம்!!

0
27

உலகின் பெரிய ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.. நாசாவால் முடியாததை முடித்த தனியார் நிறுவனம்!!

நாசாவால் முடியாததை முடித்த தனியார் நிறுவனம்!
நியூயார்க்
உலகில் பெரிய நாடுகள் எல்லாம் விண்வெளி துறையில் முக்கியமான பங்காற்றி வருகிறது.
ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் சில தனியார் நிறுவனங்களும் விண்வெளி துறையில் முக்கியமான மைல்கல்லை எட்டி வருகிறது.
அந்த வகையில் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் மிக சிறப்பான பணிகளை செய்து வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் கோடிஸ்வரர்களில் ஒருவரான ‘எலோன் மஸ்க்’ என்பவரின் நிறுவனம் ஆகும் இது. இந்த நிறுவனம் தற்போது உலகிலேயே பெரிய ராக்கெட்டை ஏவ இருக்கிறது. அந்த ராக்கெட் இன்று மதியம் ஏவப்படும்.

என்ன மாதிரியான ராக்கெட்

இந்த ராக்கெட்டிற்கு ”ஃபல்கான் ஹெவி” என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. உலகிலேயே இதுதான் பெரிய சக்தி வாய்ந்த ராக்கெட் ஆகும். 18 போயிங் விமானங்களுக்கு இணையான சக்தியும், 747 ஜெட் விமானங்களுக்கு இணையாக வேகமும் இதில் இருக்கிறது. இதன் மூலம் மனிதர்களை எளிதாக செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும் என்று கூறப்படுகிறது.
என்ன நடக்கும்
இதன்மூலம் 64 மெட்ரிக் டன் எடையை பூமியின் சுற்றுவட்டப்பாதையிலும், 16 மெட்ரிக் டன் எடையை செவ்வாய் கிரகத்திலும் நிறுத்த முடியும். நாசா 1970களில் துறந்த ‘சாட்டர்ன் வி’ ராக்கெட்டை விட இது பல மடங்கு பெரிது. இதுவரை அந்த ராக்கெட்தான் பெரிய ராக்கெட்டாக இருந்து வந்தது.
ஏன் அனுப்பப்படுகிறது
இந்த ராக்கெட் தற்போது எந்த முக்கியமான காரணத்திற்காகவும் அனுப்பப்படவில்லை. இதில் தற்போது தேவையில்லாத பொருட்களை சில மட்டும் வெறுமனே எடைக்காக வைக்கப்பட்டு அனுப்பப்பட இருக்கிறது. எதிர்காலத்தில் இதை குறிப்பிட்ட காரணங்களுக்காக அனுப்ப திட்டம் இருக்கிறது.
நேரம்
இந்திய நேரப்படி இன்று மதியம் 12 மணிக்கு மேல் இந்த ராக்கெட் ஏவப்படும். தற்போது நாசாவை விட சிறந்த நிறுவனமாக இந்த் நிறுவனம் மாறியுள்ளது. அமெரிக்க விமானப்படையே இந்த ராக்கெட் குறித்து விளக்கம் கேட்டு, சில உதவியும் கேட்டு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here