சீனாவை முந்தும் இந்தியா: இன்று உலக மக்கள்தொகை தினம்

0
101

மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள்தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடு சீனா. இச்சாதனையை இன்னும் ஏழு ஆண்டுகளில் இந்தியா முறியடித்துவிடும் என ஐ.நா., தெரிவிக்கிறது. உலகின் மக்கள்தொகை தற்போது 760 கோடியாக உள்ளது. இதில் முதலிடத்தில் உள்ள சீனாவின் மக்கள் தொகை 137 கோடி. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவின் மக்கள்தொகை 2011 படி, 121 கோடி. இன்னும் ஏழு ஆண்டுகளில் (2024ம் ஆண்டு) சீனாவை முந்தி, இந்தியா முதலிடத்தை பெறும் என ஐ.நா., ஆய்வு தெரிவித்துள்ளது.

 

9 நாடுகள்

2050ல் உலக மக்கள்தொகையில் சரிபாதியாக 9 நாடுகளின் மக்கள்தொகை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவை இந்தியா, நைஜீரியா, காங்கோ, பாகிஸ்தான்,
எத்தியோப்பியா, தான்சானியா, அமெரிக்கா, உகாண்டா, இந்தோனேஷியா. மேலும் இந்த நாடுகள் தான், உலகின் மக்கள்தொகை அதிகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும்.

 

உலகின் மக்கள் தொகை

தற்போதைய மக்கள்தொகையை விட அடுத்த 13 ஆண்டுகளில் 100 கோடி அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு மக்கள்தொகை
1990 530 கோடி
2017 760 கோடி
2030 860 கோடி
2050 980 கோடி
2100 1,120 கோடி

 

முதியோர் எண்ணிக்கை

உலகில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் எண்ணிக்கை 2100ம் ஆண்டில் 310 கோடியாக அதிகரிக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது.
ஆண்டு எண்ணிக்கை
1990 50 கோடி
2017 100 கோடி
2050 210 கோடி
2100 310 கோடி

 

பிறப்பு விகிதம்

உலகளவில் சராசரி மக்கள்தொகை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1990ல் பிறப்பு விகிதம் 3 என்பது 2100ல் இரண்டாக இருக்கும்.
ஆண்டு சதவீதம்
1990 – 95 3.0
2010 – 15 2.5
2045 – 50 2.2
2095 – 2100 2.0

 

குறைவான நாடுகள்

சீனா, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, ஜப்பான், வியட்நாம், ஜெர்மனி, ஈரான், தாய்லாந்து, பிரிட்டன் ஆகியவை மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைவாக உள்ள டாப் 10 நாடுகள்.

 

இரட்டிப்பு

2050ம் ஆண்டுக்குள் 23 ஆப்ரிக்க நாடுகளின் மக்கள்தொகை இரட்டிப்பாகி விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here