உலகின் மிகப்பெரிய டேட்டா மையம்!

0
63

உலகின் மிகப்பெரிய டேட்டா மையம்!

நார்வே நாட்டின் பெலஞ்சன் பகுதியில் உள்ள ஆர்டிக் வளையம் அமைந்துள்ள பகுதியில் உலகிலேயே மிகப்பெரிய தரவு சேமிப்பகத்தை அதாவது DATA மையத்தை அமைக்க கோலோஸ் எண்ணும் பிரபல தொழில்நுட்ப நிறுவனம் தனது முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

மலைகள் மற்றும் பனியால் சூழப்பட்ட இந்த இடத்தில் புனல்மின்சக்தியும் கிடைப்பதனால் இங்கே தரவுகளை சேமித்து வைப்பதற்கேற்ற இலகுவான சூழ்நிலையியல் நிலவுவதாக கோலோஸ் நிறுவனம் கணித்துள்ளது.

இந்த இடத்தில் மிகப்பெரிய தரவகத்தை அமைக்கும் பணிகளை அமெரிக்காவும், நார்வேவும் தனது நாட்டில் உள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து நிறைய வசூலையும் பெற்றுள்ளது. செலவு அதிகமானால் அதன் தொகையை அமெரிக்க முதலீட்டு வங்கியிடம் இருந்து பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.

முதற்கட்டமாக கோலோஸ் நிறுவனம் தான் அமைக்கவிருக்கும் தரவு சேகரிப்பு மையத்தின் ஊடாக 70 மெகாவாட்ஸ் சக்தியை பெறமுடியும் என்றும், பிற்காலத்தில் 1000 மெகாவாட்ஸ் சக்தியை பெறமுடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுவரை அதிகபட்சமாக அமேசான் தரவு மையங்கள் 1000 மெகாவாட்ஸ் சக்தியையே பெற்று வருகின்றன. அதிலும் தனியொரு மையமாக நின்று இவ்வளவு சக்தியை பெறவில்லை. அதன் கிளை மையங்கள் அனைத்திலும் இருந்தே இவ்வளவு சக்தியை பெற்றுக்கொண்டிருக்கிறது. 2013ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் தரவு மையமானது மொத்தமாகவே 120 மெகாவாட்ஸ் சக்தியையே பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே கோலோஸ் திட்டமிட்டுள்ள தரவு மையமே உலகின் மிகப்பெரிய மையமாக திகழும் என்பதில் சந்தேகமே இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here