டென்ஷனா? கவலையே வேண்டாம்…

0
42

டென்ஷனா? கவலையே வேண்டாம்…

மன அழுத்தம் தீவிர அடையும் போது பயம், புது புது கற்பனைகள், சந்தேகம், கோபம் மற்றும் வெறுப்பு போன்றவைகளும் ஏற்படுகின்றன. இந்த தீவிர நிலையிலுமே கூட உணவுகளை கொண்டு இந்நோயை விரட்டியடிக்க முடியும்.

மற்ற நோய்கள் போலவே மன நோயும் குணப்படுத்த கூடியதுதான். மன நோய்க்கு முக்கிய காரணம் தூங்காமல் இருப்பது தான். சரியான நேரத்தில் தூங்கி எழுந்தாலே நம் உடலில் உண்டாகும் பாதி பிரச்சனைகளில் இருந்து தவிர்த்துக்கொள்ளலாம்.

குறைந்தபட்சம் 6 மணி நேரம் அல்லது அதிகபட்சம் 8 மணி நேர தூக்கம்  ஒருவனை நல்ல உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும். இப்போது எவ்வகையான உணவுகள் நமது மன வளத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.

மாதுளம்பழம்

மருத்துவ குணங்களை கொண்ட மாதுளம்பழம் உடலில் இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தி, மனநிலையை சமன்படுத்தவும், உடல் வலிமைக்கும் உதவுகிறது. இப்பழத்தின் சாற்றுடன் ஐஸ் கட்டி,  வெள்ளை சர்க்கரை போன்றவையை சேர்க்காமல் தினமும் பருகி வர மன அழுத்தம் குறைகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

வாழைப்பழம்

விட்டமின் சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் நமது மூளையில் சுரக்கும் செரட்டோன் சுரப்பியை கட்டுப்படுத்துகிறது. இந்த சுரப்பியானது பல உளவியல் நோய்களுக்கு காரணமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்துவதில் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஜாதிக்காய்

ஜாதிக்காய் பொடியை சிறிது பாலில் கலந்து குடித்தால் நிம்மதியாக இரவு தூக்கம் வரும். அத்துடன் மன அழுத்தத்தை விரட்டக் கூடிய சக்தி ஜாதிக்காய்க்கு உண்டு.

இருமுறை குளியல்

குளித்தல் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று, அதனை காலை மாலை என  இருமுறை குளிப்பதால் உடல் அழுக்கோடு, மன அழுத்தமும் போகும்.

சீராக தண்ணீர்

மன அழுத்தம் உள்ளவர்கள் சீராக தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக வெட்டிவேர் போட்டு வைத்த தண்ணீரை பருகி வருவது மன அழுத்தத்தை குறைப்பதற்கு உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here