இத்தனை நாடுகளில் தமிழ் வாழ்கிறது!

0
38

இத்தனை நாடுகளில் தமிழ் வாழ்கிறது!

உலகின் மூத்த இனம் என அறிவியல் விஞ்ஞான வல்லுனர்களால் போற்றப்படும் தமிழர் இனத்தின் பரம்பரையினர் உலகம் முழுவதும் படர்ந்து வாழ்ந்தனர். இதற்கு பல சாட்சியங்களும் ஆதாரப்பூர்வ கண்டெடுப்புகளும் கிடைத்துள்ளன. நம் அனைவரின் கண்களுக்குமே புலப்படும் சாட்சியாக அய்யன் திருவள்ளுவன் ஈந்த திருக்குறளே இருக்கிறது.

திருக்குறளுக்கு ‘உலகப்பொதுமறை’ என்றொரு பெயரும் இருக்கிறது. தமிழர்கள் இவ்வுலகம் முழுவதும் வாழ்ந்துள்ளான் என்பதற்கு இதுவே ஆதார நூல். இன்றளவும் பல்வேறு நாடுகளிலும், பிரதேசங்களிலும், உலகளாவிய அமைப்புகளிலும் தமிழ் அலுவல் மொழியாக உள்ளது. 

நாடுகளின் அடிப்படையில்:

சிங்கப்பூர்: இந்திய வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் சிங்கப்பூரை நமது சோழர்கள் ஆண்டுள்ளனர். எனவே அந்நாட்டின் அலுவல் மொழியாக தமிழ் உள்ளது.

இலங்கை: இன்றைய இலங்கை தமிழகத்துடன் தொடர்புடையது. இந்தியப் பெருஞ்சமுத்திரத்துக்குள் மூழ்கியுள்ள குமரிக்கண்டத்தின் எஞ்சிய பகுதியே இலங்கை. இலங்கை தமிழர்களின் தமிழ் பண்டைய தமிழ் மொழியை ஒத்தது மற்றும் சுத்தமான தமிழ்(கொடுந்தமிழ்) ஆகும். இலங்கையில் தமிழ் அலுவல் மொழியாக உள்ளது.

மாகாணங்களின் அடிப்படையில்:

அந்தமான் நிக்கோபார் தீவுகள்: சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியாக விளங்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் பண்டைய காலத்தில் சோழ மன்னர்கள் வசம் இருந்தன.

பாண்டிச்சேரி: பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி, யானம் உள்ளிட்ட பகுதிகளை கொண்டுள்ள பாண்டிச்சேரி பிரதேசத்திலும் தமிழ் அலுவல் மொழியாக உள்ளது.

தமிழகம்: தமிழர் நாகரீகம் தழைத்தோங்கிய தமிழகத்தில் தமிழ் அலுவல் மொழியாகவும், ஆட்சிமொழியாகவும் இருக்கிறது.

ஹரியானா: வட இந்திய மாநிலமான ஹரியானாவில் தமிழ் அலுவல் மொழியாக இருந்தது. பின்னாளில் பஞ்சாபி அலுவல் மொழியாக மாற்றப்பட்டது.

சண்டிகர்: இந்தியாவின் முதல் திட்டமிடப்பட்ட கட்டமைப்பைக் கொண்ட மாநிலமான சண்டிகரில் தமிழ் அலுவல் மொழியாக இருந்தது. தற்போது பஞ்சாபி அலுவல் மொழியாக இருக்கிறது.

உலகளாவிய அமைப்புகளின் அடிப்படையில்:

ASEN: தென்கிழக்காசிய நாடுகள் அமைப்பின் அலுவல் மொழியாக தமிழ் திகழ்கிறது. இந்த அமைப்பில் பத்து தென்கிழக்காசிய நாடுகள் இணைந்திருக்கின்றன. இதில் இந்தியா இல்லை.

பிரிக்கப்படாத பிரதேசங்களின் அடிப்படையில்:

தமிழீழம்: வடகிழக்கு இலங்கையில் உள்ள புத்தளம் மாவட்டம் தமிழீழப் பகுதி என கருதப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத தனி பிரதேசமாக திகழும் இப்பகுதியின் அலுவல் மொழியாக தமிழ் இருக்கிறது.

காரைக்கால்-கொங்கு: தனிப் பிரதேசம்/மண்டலம் கோரும் காரைக்காலிலும், கொங்கு மண்டலத்திலும் தமிழ் அலுவல் மொழியாக உள்ளது.

சிறப்பு அந்தஸ்து பெற்ற மொழியாக இருப்பதன் அடிப்படையில்:

கனடா: வருடத்தில் ஜனவரி மாதத்தினை தமிழர்கள் கலாச்சார மாதமாக கடைபிடிக்கிறது கனடா அரசு.

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கு பல தமிழ்ப் பள்ளிகளும், தமிழ்ச் சங்கங்களும் இயங்கி வருகின்றன.

மலேசியா: ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தமிழ் பேசுவதால், தமிழை சிறப்பு அந்தஸ்து பெற்ற மொழியாக அங்கீகரித்துள்ளது மலேசிய அரசு. மலேசியாவில் அரசு தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

மொரீஷியஸ் – செய்ஷல்ஸ்: மொரீஷியஸ் – செய்ஷல்ஸ் தீவுகளில் பிரெஞ்சுகாரர்களின் ஆக்கிரமிப்புகளை வெளியேற்றிவிட்டு அதிகாரப்பூர்வமாக குடியமர்ந்த முதலினம் தமிழினம் ஆகும். அந்நாட்டின் காகிதப் பணங்களில் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

தென் ஆப்பிரிக்கா: தென் ஆப்பிரிக்காவின் கலாசார கட்டமைப்புகளில் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் அபாரமாக உள்ளது. தமிழர்களுக்கும் தென் ஆப்பிரிக்கர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளதாக வரலாறும் கூறுகிறது.

ரியூனியன் – பிரெஞ்சு: இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ரீயூனியன் தீவு பிரெஞ்சு ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தாலும், அதன் மக்கள் தொகையில் 50% தமிழர்களே. ஆனால் அவர்கள் தமிழ் பேசா தமிழர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here