வாவ்.. பார்க்க அப்படியே பூமி மாதிரியே இருக்கும்.. மேலும் 10 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!

0
74

நாசா: அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா, மேலும் பத்து பூமியைப் போன்ற புதிய கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது.

இந்த பத்து கிரகங்களும் அப்படியே பூமியை ஒத்து உள்ளதாகவும், இங்கு உயிரினங்கள் வசிக்கத் தேவையான அனைத்து கூறுகளும் இருக்கலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது. கெப்ளர் தொலைநோக்கிதான் இந்த கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது.

பூமியைப் போலவே சைசிலும், சூழலை ஒத்தும் பல கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்ற போதிலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்கள் கிட்டத்தட்ட பூமியைப் போலவே இருப்பதாக கூறப்படுகிறது.

அதே தட்பவெப்பம்.. அதே சைஸ்

இங்குள்ள அதே தட்பவெப்பம், கிட்டத்தட்ட பூமியை போன்ற சைஸ் என இந்த புதிய கிரகங்கள் பெரும் நம்பிக்கை தருவனவாக உள்ளனவாம். இங்கு உயிரினங்கள் வாழ வாய்ப்புகள் அதிகம் இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

சிக்னஸ் நட்சத்திரக் கூட்டம்

நமது பால்வழி மண்டலத்திற்கு வடக்கே உள்ள சிக்னஸ் நட்சத்திரக் கூட்டத்தில் (Cygnus constellation) இந்த புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 2 லட்சம் நட்சத்திரங்களை ஆராய்ந்ததில் இந்த பத்து தேறியுள்ளது.

பூராம் பாறையாம்

இந்த கிரகங்கள் பாறைகளால் ஆனதாக கூறப்படுகிறது. இங்கு தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். தண்ணீர் இருக்கும் பட்சத்தில் அங்கு உயிரும் இருக்கும் அல்லது வசிக்க வாய்ப்புள்ளது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நாம் தனியாக இல்லை

இந்த அறிவிப்பை வெளியிட்ட கெப்ளர் திட்ட விஞ்ஞானி மரியோ பெரஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாம் (பூமி- மனிதர்கள்) தனியாக இருக்கிறோமா என்ற கேள்வியைக் கேட்டால், இன்றைய கண்டுபிடிப்பையும் வைத்துப் பார்த்தால், நிச்சயம் இல்லை என்ற மறைமுக பதில் நமக்குக் கிடைக்கிறது என்றார்.

கெப்ளர் ஆய்வு

கெப்ளர் தொலைநோக்கியானது 2009ம் ஆண்டு முதல் தனது பணியைச் செய்து வருகிறது. ஏகப்பட்ட புதிய விண்மீன் கூட்டத்தையும், கிரகங்களையும் அது கண்டுபிடித்துக் கூறியுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல், நமக்கு வெளியே உள்ள உயிர் குறித்த ஆய்வுக்கு பெரும் ஊக்கம் தரும் வகையில் அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பாறையும் வாயுக்களும்

இந்த கிரகங்களில் சிலவற்றை ஆய்ந்தபோது அவை நெப்ட்யூன் கிரகமம் போல வாயுக்களால் நிரம்பியதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். 2 கிரகங்கள் அது போல இருப்பதாக கூறப்படுகிறது. மற்றவை பாறைகளால் ஆனவை. பூமியை விட ஒன்றே முக்கால் மடங்கு பெரியவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here