இந்தியாவிற்கு வெளியே பிரமாண்ட தமிழ் நூலகம்!

0
66

இந்தியாவிற்கு வெளியே பிரமாண்ட தமிழ் நூலகம்!

 தமிழர்களின் கலாச்சார குறியீடுகளையும், அவைதம் அருமை பெருமைகளையும் தாங்கி நிற்கும் அரண்களாக நூலகங்கள் திகழ்கின்றன.

யாழ் நூலகம்:

ஒரு இனம் அழிய வேண்டுமென்றால் முதலில் அவர்களின் மொழியைச் சிதைக்க வேண்டும் என ஹிட்லர் சொன்னார். அவர்களின் மொழியைச் சிதைக்க வேண்டுமென்றால் அவர்களின் நூலகங்களை அழிக்க வேண்டும் என சிங்களர்களும், கன்னடர்களும் பாடம் புகட்டியிருக்கிறார்கள். இலங்கை, தமிழீழத்தில் ஆசியாவின் அதிசிறந்த நூலகமாக, தமிழர்களின் அறிவுச் சுரங்கமாக தலை நிமிர்ந்து நின்ற யாழ்ப்பாணம் நூலகத்தை சிங்கள வெறியினர் தீ மூட்டி அழித்தொழித்தனர். பண்டைய இலக்கியங்கள், இலக்கணக் கட்டுகள், வரலாறுகள் என தமிழனின் அத்தனை செல்வச் சொத்துக்களும் தீக்கிரையாகின.

 

பெங்களூரு நூலகம்:

இதே போல கர்நாடக மாநிலத்தின், பெங்களூரு மாநகரில் அமைந்திருக்கும் அல்சூர் திருக்குறள் மன்றத்தில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பழந்தமிழ் இலக்கிய நூல்களின் சிம்மசொப்பனத்தை சுமந்து செயல்பட்டு வந்த மிகப்பெரிய தமிழ் நூலகம் கன்னட வெறியர்களால் கடந்த 2016ம் ஆண்டு வன்மையாக சூறையாடப்பட்டது. பல்லாயிரக் கணக்கான புத்தகங்கள் அழிக்கப்பட்டன.

 

கொலஞ்சே பிரமாண்ட நூலகம்:

தமிழனும் அவனது அறிவுக் குறியீடுகளும் எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து அழிக்கும் எதிர்சக்திகள் நிறைந்த இவ்வுலகில், ஜெர்மனி நாட்டில் உள்ள கொலஞ்சே பல்கலைக்கழத்தில் பிரமாண்ட தமிழ் நூலகம் ஒன்று வீற்றிருப்பது நமக்கெல்லாம் வியப்பை ஏற்படுத்தலாம். இப்பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் மற்றும் திராவிட மொழிகள் துறை அமைந்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் செயல்பட்டுவரும் மிகப்பெரிய தமிழ்த்துறை இதுவாகும்.

 

நாற்பதாயிரம் தமிழ் நூல்கள்:

அதன் நூலகத்தில்  செந்தமிழ் இலக்கியங்கள், பழந்தமிழ் இலக்கியங்கள் என சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் மானுட அறிவுப் பொக்கிஷங்களாக வைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு வெளியே, ஏன் இந்தியாவிற்கு வெளியே இருக்கும் மிகப்பெரிய தமிழ் நூலகம் இதுதான் என்றால் அது மிகையாகாது.

 

பேராசிரியர் உல்ரைக் நிக்லஸ்:

இந்த மீப்பெரும் தமிழிய தலைநிமிர்வை நமக்கெல்லாம் ஏற்படுத்திக் கொடுத்தவர் பேராசிரியர் உல்ரைக் நிக்லஸ். 1970-80ம் காலகட்டங்களில் தமிழ்நாட்டிற்கு வந்த நிக்லஸ், திராவிடர் இயக்கம், பெரியார் சித்தாந்தம், தமிழ்மொழி ஆகியவற்றின் மீது கொண்ட காதலால் தானும் தமிழ் பயில முன்வந்தார். தமிழின் மீது கொண்ட பற்றினால் சிங்கப்பூரில் உள்ள தென்கிழக்காசிய பல்கலைக்கழகத்தில் 7 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றினார். பின்னர் கொலஞ்சே பல்கலைக்கழகம் உருவானபோது இந்தியவியல் மற்றும் திராவிட மொழித்துறைக்கு தலைவர் ஆனார்.

 

சிவாஜி படங்கள்:

தமிழ் பயின்ற காலத்தில் இவருக்கு மிக்க உறுதுணையாக நின்றவை சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் என தெரிவிக்கிறார். முத்தொள்ளாயிரம் என்ற இலக்கிய நூலை மையமாக வைத்து முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். குறிப்பாக பெரியாரின் கருத்துக்களை உலகுடன் பகிர்வதில் ஆர்வம் கொண்டவர் இந்த பேராசிரியர் உல்ரைக் நிக்லஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here