சிந்துவுக்கு ரிப்பீட்டு… ஹாங்காங் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்!

0
54

சிந்துவுக்கு ரிப்பீட்டு… ஹாங்காங் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்!

ஹாங்காங்: சூப்பர் சீரிஸ் போட்டியான ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியின் பைனலில் இந்தியாவின் பி.வி. சிந்து, உலகின் நம்பர் 1 வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான சீன தைபேயின் டாய் ட்சூ யிங்கிடம் போராடி தோல்வியடைந்தார். பாட்மின்டன் போட்டிகளில், ஒவ்வொரு ஆண்டும், சூப்பர் சீரியஸ் பிரிவின் கீழ், 13 ஓபன் போட்டிகள் நடக்கின்றன. அதில் கடைசி ஓபன் போட்டியான ஹாங்காங் ஓபன் போட்டி நடந்து முடிந்துள்ளது. அடுத்ததாக சூப்பர் சீரியஸ் மாஸ்டர்ஸ் பைனல்ஸ் துபாயில் நடக்க உள்ளது. இந்த ஆண்டில் சூப்பர் சீரியஸ் பிரிவில் இதுவரை நடந்துள்ள 11 ஓபன் போட்டிகளில் இந்தியாவுக்கு, 7 பட்டம் கிடைத்துள்ளது. கிடாம்பி ஸ்ரீகாந்த் நான்கு பட்டங்களும், பி.வி.சிந்து 2 பட்டங்களும், சாய் பிரனீத் ஒரு பட்டமும் வென்றுள்ளார்.
காயம் காரணமாக கிடாம்பி ஸ்ரீகாந்த் ஹாங்காங் போட்டியில் பங்கேற்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாய்னா நெஹ்வால் மற்றும் எச்எஸ் பிரனாய் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறினர்.

சீன ஓபன் போட்டியைப் போலவே, தனியாக காலிறுதிக்கு முன்னேறிய சிந்து, கடந்தாண்டைப் போலவே பைனலுக்கு முன்னேறினார். நேற்று இரவு நடந்த பைனலில் சீன தைபேயின் டாய் ட்சூ யிங்கை சந்தித்தார். பரபரப்பான இந்த ஆட்டத்தில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான யிங்குக்கு கடும் சவால் விடுத்தார் சிந்து.

போராடி இழந்தார்: முதல் செட்டில் 3-0 என்று பின்தங்கியிருந்த நிலையில், போராடி சிந்து முன்னேறி வந்தார். முதல் செட்டை 18-21 என்ற கணக்கில் இழந்தார். இரண்டாவது செட்டிலும் சிந்து கடும் போட்டி கொடுத்தார். ஆனால், இறுதியில் யிங்க் 21-18, 21-18 என்ற செட்களில் வென்றார்.

தொடரும் சோகம்: கடந்த ஆண்டு பைனலிலும் யிங்கிடம் சிந்து தோல்வியடைந்தார். சீன தைபே வீராங்கனை யிங்க் இந்த ஆண்டு ஆல் இங்கிலாந்து, மலேசியா ஓபன், சிங்கப்பூர் ஓபன், பிரான்ஸ் ஓபன் மற்றும் தற்போது ஹாங்காங் ஓபன் பட்டங்களை வென்றுள்ளார். ஹாங்காங் ஓபன் போட்டி, 1982ல் துவங்கியபோது, முதல் பட்டத்தை பிரகாஷ் படுகோனே வென்றார். 2010ல் சாய்னா நெஹ்வால் வென்றார்.

மூன்றாவது பட்ட வாய்ப்பு போச்சு: இந்த ஆண்டில் நான்கு முக்கிய போட்டிகளில் பைனலுக்கு சிந்து முன்னேறினார். அதில் இந்திய ஓபன் மற்றும் கொரிய ஓபன் பட்டங்களை வென்றார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பானின் நோசோமி ஒகுகாராவிடம் தோல்வியடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here