ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் முகத்தை சீரமைத்து காட்சிக்கு வைத்த விஞ்ஞானிகள்!

0
29

ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் முகத்தை சீரமைத்து காட்சிக்கு வைத்த விஞ்ஞானிகள்!

கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரில் உள்ள அக்ரோபோலிஸ் அருங்காட்சியகத்தில், 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இளம் பெண்ணின் உருவம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த பெண்ணின் எலும்புகள் 1993-ம் ஆண்டு ஒரு குகையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
எலும்புகளை ஆராய்ந்து பார்க்கும் போது இது கற்காலத்தில் வாழ்ந்த 15-லிருந்து 18 வரை வயது உடைய இளம்பெண் என்பது தெரிய வந்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அந்த முகத்தை விஞ்ஞானிகள் சீரமைத்து காட்சிக்கு வைத்துள்ளனர். அந்த முகம் கோபத்துடன் இருப்பது போல் உள்ளது.
மேலும் இந்த பெண் ஸ்கர்வி நோயால் இறந்திருக்கலாம் என கூறுகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here