தென் தமிழகத்தில் இன்று இரவு முதல் டிசம்பர் 1 வரை கனமழை பெய்யும்..வீடியோ

0
120

தென் தமிழகத்தில் இன்று இரவு முதல் டிசம்பர் ஒன்றாம் தேதி வரை கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கியது.

ஆனால் இதுவரை இயல்பான அளவில் மழை பெய்யவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது மீண்டும் வடகிழக்குப் பருவமழை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இலங்கை அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இலங்கை அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரமடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று இரவு முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என தமிழ்நாடுவெதர்மேன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர், ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, தஞ்சாவூர், திருச்சி, கடலூர் மற்றும திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

காற்றழுத்த தாழ்வுநிலை அரபிக்கடலுக்கு நகரும்போது நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியிலும் நல்ல மழையை எதிர்ப்பார்க்கலாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

ஆனால் கன்னியாகுமரி, நெல்லை, தேனி மாவட்டங்களில் இன்று இரவு முதல் டிசம்பர் ஒன்றாம் தேதி வரை மழை கனமழை கொட்டித்தீர்க்கும் என்றும் வெதர்மேன் கூறியுள்ளார். சென்னையில் இன்றிரவு, நாளை மற்றும் டிசம்பர் 1ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் இன்று முதல் நாளை காலை வரை மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here