மானாமதுரை வந்த ஜப்பான் நாட்டு மாணவர்! ஏன் தெரியுமா?

0
37

மானாமதுரை வந்த ஜப்பான் நாட்டு மாணவர்! ஏன் தெரியுமா?

மதுரை மல்லி, மானாமதுரை மண்பாண்டம் என பெருமைக்குரிய ஊர்களின் பட்டியலில் இடம்பிடித்திருப்பது மானாமதுரை. இசைக்கலைஞர்கள் இசைக்கருவிகளில் ஒன்றாகப் பயன்படுத்தும் கடம் உலகில் எங்கு தயாரானாலும் மானாமதுரையில் தயாராகும் கடத்துக்கு இணையாக இதுவரைக்கும் எங்குமே தயாரிக்கமுடியவில்லை.
அதனால்தான் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் கடம் வாங்குவதற்காக மானாமதுரைக்கு படையெடுக்கிறார்கள் இசைக்கலைஞர்கள்.
ஏ.ஆர் ரகுமான், பிரபல வித்வான்களான விநாயக்ராம், சுரேஷ் போன்றவர்கள் இங்கே தான் கடம் வாங்கியிருக்கிறார்கள். சர்வதேச அளவில் கடல் கடந்து மானாமதுரையில் தயாரிக்கும் கடம் விமானத்தில் பறக்கிறது. அந்த வகையில், ஜப்பான் நாட்டின் சிபா மாநிலத்தைச் சேர்ந்தவர் ருய்ச்சிரோசகன். இவர் ஜப்பான் நாட்டில் ஆண்டுதோறும் கலாசார திருவிழா நடைபெறும்.
அந்த நிகழ்ச்சியில் இலங்கை, இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல்வேறு இசைக்கலைஞர்கள் பங்கேற்று இசை நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். இதற்காகவே கர்நாடக இசையை கற்றுக்கொள்வதற்காக இசைக்கருவிகளைத் தேடியபோது கடம் முக்கிய பங்கு வகிப்பதை அறிந்த இவர் கடம் பற்றி இணைய தளத்தில் தேடி மானாமதுரைக்கு வந்தார். ஏற்கெனவே கடம் தயாரிப்பில் கில்லாடியான மீனாட்சி ஜனாதிபதி விருது பெற்றவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துபோனார்.
அவருடைய மகன் ரமேஷ், அவரைப் போன்றே கடம் தயாரித்து வருவதால் இசைக் கலைஞர்களுக்கு சந்தோஷம். ஜப்பான் இளைஞர் அங்குள்ள பள்ளியில் உயர்கல்வி படித்துவருகிறார். அங்கு நடக்கும் இசை நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காகவே இங்கு வந்து கடம் வாங்கிச் செல்வதாகவும் கடம் மிகவும் மெல்லிய இசையை மனதுக்கு இதமாக கொடுக்கிறது என்று மகிழ்ச்சியோடு வாங்கிச்சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here