தனி நாட்டை உருவாக்கிய இந்திய வாலிபர்!

0
30

தனி நாட்டை உருவாக்கிய இந்திய வாலிபர்!

எகிப்துக்கு சூடானுக்கும் இடையில் உள்ள நிலப்பரப்பை தன்னுடைய நாடாக அறிவித்து அதற்கு கொடி ஒன்றையும் உருவாக்கியுள்ளார். அந்த பகுதிக்கு எந்த நாடும் உரிமை கொண்டியாது கிடையாது. குகூள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் அதனை விட்டுவிட்டு சுயமாக ‘சாப்டினேட்டர்’ என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இவர் தான் தனது நாட்டிற்கு அங்கீகாரம் பெற முடிவு செய்து இருக்கிறார். இதற்காக ஐநா சபைக்கு மெயில் அனுப்ப திட்டமிட்டுள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுயாஷ் தீட்சித் என்ற நபர் தற்போது இந்த ‘பிர் தா’ பகுதியை சொந்தம் கொண்டாடி இருக்கிறார். மேலும் தன்னை அந்த நாட்டின் ராஜாவாக அறிவித்து உள்ளார்.

நாட்டின் ராஜாவாக

தற்போது அந்த நாட்டில் தனக்கு என்று கொஞ்சம் நிலத்தை ஒதுக்கி உள்ளார். சூடானுக்கு அருகில் இருக்கும் இந்த பகுதிக்கு செல்வது மிகவும் கடினம் ஆகும். சூடானின் ராணுவமும், அங்கு இருக்கும் தீவிரவாதிகளும் எப்போது வேண்டுமானாலும் கண்டதும் சுட வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் சுயாஷ் தீட்சித் மிகவும் கஷ்டப்பட்டு சூடான் ராணுவத்திடம் அனுமதி வாங்கி அங்கு சென்று இருக்கிறார். மேலும் அங்கு சென்று தன்னுடைய நாட்டின் கொடியை அங்கு நட்டு இருக்கிறார்.

அதேபோல் அங்கு விதை ஒன்றை போட்டு தண்ணீர் விட்டு இருக்கிறார். இந்த புதிய நாட்டிற்கு அவர் ‘தி கிங்கிடம் ஆப் சுயாஷ் தீட்சித்’ என்று பெயரிட்டு இருக்கிறார். இந்த நாட்டிற்கு நமக்கும் குடிமகனாக செல்லலாம். அவரிடம் அனுமதி பெற்று குடிமகனுக்கான உரிமையை பெற வேண்டுமாம். மேலும் அங்கு நிலம் வாங்கவும் இப்போதே விண்ணப்பிக்கும் படி அவர் கூறியிருக்கிறார். அங்கு நிலம் வாங்கியவர்கள் உடனடியாக அங்கு செடி நட்டு தண்ணீர் விட வேண்டும் என்பது அவர் வைத்திருக்கும் சட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here