இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. கோஹ்லிக்கு இடமில்லை.. கேப்டன் யார் ?

0
59

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. கோஹ்லிக்கு இடமில்லை.. கேப்டன் யார் ?

டெல்லி: இந்திய அணி இலங்கைக்கு எதிராக 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளது. இந்த நிலையில் டிசம்பர் தொடக்கத்தில் ஒருநாள் தொடர் நடக்க இருக்கிறது. தற்போது இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொடருக்காக இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி இலங்கைக்கு எதிராக இந்த வருடத்தின் கடைசி ஒருநாள் தொடரை விளையாட இருக்கிறது. டிசம்பர் 10ம் தேதி இமாச்சல பிரதேசத்தில் இந்த போட்டி தொடங்க இருக்கிறது. இரண்டாவது போட்டி பஞ்சாப்பில் நடக்கும் . மூன்றாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறும். மேலும் இந்த போட்டிக்கு பின் மூன்று டி-20 போட்டிகள் நடக்க இருக்கிறது. இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர் டிசம்பர் 24ம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் இந்திய அணியில் சித்தார்த் கவுல் என்ற பஞ்சாப்பை சேர்ந்த புதிய பிளேயர் ஒருவர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். ரோஹித், தவான், மனிஷ் பாண்டே, ரஹானே, தினேஷ் கார்த்திக், ஷ்ரேயஸ் ஐயர், சித்தார்த் கவுல் , டோணி, பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், கேதார் ஜாதவ் , சாஹல், பும்ரா ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். கோஹ்லி தலைமையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தவான் மீண்டும் சேர்ந்து இருக்கிறார்.

ஒருநாள் கேப்டன்: இந்த போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஒய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் புதிய கேப்டன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதன்படி ரோஹித் சர்மா தலைமையில் இந்த ஒருநாள் தொடரை இந்தியா விளையாடும். இந்த வருடத்தின் கடைசி தொடர் என்பதால் இது மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here