வரலாற்று சிறப்புமிக்க வாள்கள்!

0
55

வரலாற்று சிறப்புமிக்க வாள்கள்!

ஓர் அரசரின் வீரத்தை தாங்கி நிற்பது அவனது வெற்றிகள். அந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவை அவன் ஏந்தி சண்டையிட்ட வாள்கள். வாள் தான் அந்த காலத்தில் அவர்களுக்கு வாழ்க்கை தந்தது என்பதே உண்மை.

ஏறத்தாழ ஆறடி நீளம் கொண்டிருந்ததாம் ராஜராஜ சோழனின் வாள். அந்த வாளை இன்று ஒருவரால் தூக்கக் கூட முடியாது. ஆனால், ராஜராஜன் அதை தூக்கி, சுழற்றி தனது எதிரிகளின் தலைகளை கொய்து வெற்றி மகுடம் சூடியுள்ளான். 

ஓர் அரசனின் வாள் அவனது வெற்றிகள், வலிமை, ஆதிக்கம் போன்றவற்றை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கும் புத்தகம் மற்றும் அவனை பற்றி முழுமையாக அறிந்துக் கொள்ள உதவிய கருவி என வரலாற்றில் கூறியிருக்கிறார்கள்.

உலகின் பல பகுதிகளில் அமைந்திருந்த ஒவ்வொரு ராஜ்ஜியமும் அவரவர்களுக்கு ஏற்ப பலவகை வாள்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். பெரும் சாம்ராஜ்ஜியங்கள் யாராலும் உருவாக்க முடியாதபடி தனித்துவமான வாள்களும் தயாரித்துள்ளனர். ஒவ்வொரு வாளுக்கும் ஒவ்வொரு குணம் இருக்கிறது.

கோப்பேஷ்

கோப்பேஷ் (The Khopesh)! இது பண்டையக் காலத்து எகிப்தில் பயன்படுத்த வாளாக கருதப்படுகிறது. பொதுவாக வாள்கள் இருப்பக்கமும் கூர்மையாக இருக்கும். ஆனால், இந்த வாளில் வெளிப்பகுதி மட்டுமே கூராக இருக்கிறது. இது அதிகார வர்க்கத்திடம் மட்டுமே காணப்பட்ட வாளாகவும், அவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த வாளாகவும் கூறப்படுகிறது. இரண்டாம் ரம்சேஸ் மற்றும் துட்டன்கமன் போன்ற எகிப்து அரசர்களின் இந்த வாள்கள் கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உல்ப்ஃபெர்ட்

உல்ப்ஃபெர்ட் (The Ulfbehrt Sword)! இந்த வாள் எடை குறைவாக இருந்தாலும், மிகவும் வலிமையானது, வளையதக்கது. வைக்கிங் உல்ப்ஃபெர்ட் வாள்களின் பிளேடுகள் மிகவும் தூய்மையான இரும்பாக கருதப்படும் குரூசிபிளில் (Crucible) உருவாக்கப்பட்டவை. இன்றைய கொல்லர்களால் இதை மீண்டும் உருவாக்குவது மிகவும் கடினம் என்றும். நாம் வரலாற்றில் இடைக் காலங்களில் கண்ட வாள்களை கட்டிலும் இவை மிகவும் அட்வான்ஸ்டு வாளாக கருதுகிறார்கள்.

கஹ்ந்தா

கஹ்ந்தா (The Khanda)! இந்த வகை வாள்களின் முன் பகுதி கொஞ்சம் மழுங்கியது போல தான் இருக்கும். இது குத்திக் கிழிக்க பயன்படுத்தும் வாள்கள் அல்ல. எதிரிகளின் கழுத்தை அறுக்க உதவும் வால்கள். இதன் இருபுறமும் முற்கள் (ரம்பம் போன்ற) போன்ற கூர்மை இருக்கும். இது இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாளாக காணப்படுகிறது. இது பயங்கரமான வாளாக திகழ்ந்துள்ளது.

தி ஃப்ளம்மர்ட்

தி ஃப்ளம்மர்ட் (Flammard), இவை அலை போன்ற வடிவத்தில் கூர்மையான பிளேடுகள் கொண்டவை. இது மறுமலர்ச்சிக்கு பிரதானமானது என்கிறார்கள். இது மிக கொடூரமான முறையில் கொலை செய்ய பயன்படுத்திய வாளாக இருக்கலாம் என சிலர் கருதுகிறார்கள். ஆனால், உண்மை என்னவெனில், மற்ற வாள்கள் அனைத்தும் பிளைனாக இருக்கும். எதிரி வாளை கொண்டு தாக்க வரும் போது, இது போன்ற அலை வடிவத்திலான வாள்கள் தற்காக்க பெரிதும் உதவும். இது எதிரி வாளின் வேகத்தை குறைக்கும். ஒருமுறை வீசிய வாளை , மீண்டும் தூக்கி தாக்க வீசுவது சிரமமாக இருக்கும். அலை வடிவத்தில் தடுக்கி வாள் வீச்சின் தாக்கத்தை குறைக்க செய்யும் இந்த ஃப்ளம்மர்ட் வகை வாள்கள்.

சைனீஸ் ஹூக்

சைனீஸ் ஹூக் (Chinese Hook Sword)! இவை கொஞ்சம் அபாயமான வாள்கள் ஆகும். பிளேடு மட்டுமின்றி, இதன் கைப்பிடி தற்காப்பு பகுதியும் ஷார்ப்பாக இருக்கும். இந்த வகை சைனீஸ் ஹூக் வாள்களை இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்டு தான் சண்டை போடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here