வாரம் ஒரு நாள் கோழி நெஞ்சுக் கறி சாப்பிடுங்க!

0
23

வாரம் ஒரு நாள் கோழி நெஞ்சுக் கறி சாப்பிடுங்க!

உடலில் கொழுப்புகள் அவசியம்தான். ஆனால் ஒழுங்கா வேலையை செய்யாமல் ஒரே இடத்தில் உட்காந்து டிவி பார்த்தா, கொழுப்புகள் எரிக்கப்படாமல் அதுவும் வயிற்றுக்குள்ளேயே உட்காந்துக்கும். தினமும் அப்படியே உட்காந்தா, அதுவும் தினமும் அப்படியே உட்காந்துக்கும்.

அப்புறம் நீங்களே நினைச்சாலும் அது உட்காந்த இடத்தை விட்டு அசையாது. நீங்க மாங்கு மாங்குன்னு வேலை செய்ய ஆரம்பிச்சாலும், அது உடனே தன் வேலையை ஆரம்பிக்காது. இதனால்தான் நீங்கள் எல்லார்கிட்டையும் அடிக்கடி இப்படி பதில் சொல்ல வேண்டிய நிலைமை வருகிறது. – ” வீட்ல வேலையெல்லாம் பண்றேன். ஆனா இடுப்பு குறைய மாட்டீங்குது. ஜிம் போறேன். ஆனா உடம்பு குறைய மாட்டேங்குது” என குண்டாயிருக்கும் ஆண்களும் பெண்களும் சொல்லும் பதில் இதுவாகத்தான் இருக்கும்.

உங்களுக்கு விரைவில் கொழுப்பை எரிக்க வேண்டும் என்று ஆசையிருந்தால் இன்றிலிருந்து நீங்கள் முயற்சிக்க வேண்டும். சரியாக ஒரு மாதத்தில் நீங்கள் வித்யாசம் காண்பீர்கள். உடனடியாக கொழுப்பு கரைய என்று விளம்பரங்களில் வரும் மாத்திரைகளையோ, அல்லது பெல்டுகளையோ நீங்கள் நம்ப வேண்டாம். அவை உங்களை ஏமாற்றும், இரட்டிப்பான உடல் பருமனை அளித்துவிடும். உங்கள் சிறுநீரகத்திற்கும் ஆபத்தானது.

நீங்கள் சாப்பிடும் உணவிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். உடனே மாற்றம் தெரிய நீங்கள் மேஜிக் செய்யப் போவதில்லை. உங்கள் வாழ்க்கையை ஆரோக்கியமான திசையில் திருப்பும்போது மெதுவாகத்தான் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். ஆனால் உங்கள் உடல் எடை வியக்கும்படி குறையும் என்பதில் ஆச்சரியமில்லை. அப்படி உங்கள் உடல் கொழுப்பை வேகமாக கரைக்கும் உணவுகளை பார்க்கலாமா?

கோழியின் நெஞ்சுக் கறி :

உங்களுக்கு கொழுப்பு வேகமாக கரைய நினைத்தாலும் இதுவும் ஒரு ட்ரிக் தான். வாரம் ஒரு நாள் அல்லது 3 நாட்கள் என கோழியின் நெஞ்சுக் கறியை சாப்பிட்டுப் பாருங்கள். இதில் அதிக புரதம் இருக்கிறது. மிகக் குறைந்த அளவே கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உள்ளது. அதுமட்டுமில்லாம விட்டமின் பி3, பி6 மிக அதிக அளவு உள்ளது. இவை கொழுப்பை கரைய துணையாக உதவிபுரிகின்றது.

இஞ்சி , பூண்டு :

நீங்கள் உண்ணும் உணவுகளில் இந்த இரண்டையும் கட்டாயம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இஞ்சியையும் பூண்டையும் கலந்த உணவுகளை தினமும் 3 தடவையாவதுய் சேர்த்துக் கொள்ள வேண்டும். சூப்பில் ரசத்தில் என சமைத்து சாப்பிடலாம். இஞ்சி, பூண்டு கலந்த ரசம் தினமும் செய்து சாப்பிட்டால் அற்புத பலன்கள் கிடைக்கும்.

வெள்ளைக் கரு :

உண்மைதான். தினமும் வெள்ளைக் கருவையே காலை உனவாக சாப்பிடுங்கள். இரவும் வெள்ளைக் கருவையே சாப்பிடுங்கள். 4, 5 வெள்ளைக் கருவை தினமும் அவித்து சாப்பிட வேண்டும். அதிக புரதம் கொண்டது மட்டுமல்லாமல் வேகமாக கொழுப்பையும் குறைக்கும் விட்டமின் ஏ மிக அதிகம் கொண்ட உணவுப் பொருள் முட்டைதான்.

ஆகவே தினமும் யோசிக்காமல் முட்டையில் வெள்ளைக் கரு எடுத்துக் கொள்ளுங்கள். பாய்லர் கோழிமுட்டைகள் வேண்டாம். நாட்டுக் கோழிமுட்டைகளை மட்டும் சாப்பிடுங்கள்.

வெண்டைக்காய் :

வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை இதனை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் சர்க்கரை நோயாளிகளும் இதனை உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

ஊற வைத்த வெந்தயம் :

வெந்தயம் சிறியதாக இருந்தாலும் விடாபடியாக தங்கியிருக்கும் கொழுப்புகளையும் அப்புறப்படுத்தும் என்பது ஆச்சரியமே. வெந்தயத்தை ஊற வைத்து மறு நாள் வெந்தயத்தை மென்று சாப்பிட்டு பின் அந்த நீரை குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால் உடலிலுள்ள கொழுப்புகள் தானாகவே கரையும். அப்படி முடியவில்லைன்றால் நீங்கள் சாப்பிடும் உணவுகள் வெந்தயப் பொடியை தினமும் 1 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கத்திரிக்காய் :

வாரத்தில் 4 நாட்களுக்கு கத்திரிகாய் குழம்பு, பொறியல், கூட்டு என செய்து சாப்பிடுங்கள். ஏனென்றால் கலோரிகளே இல்லாத உணவு வகைகளில் கத்தரிக்காயையும் சேர்க்கலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள கத்திரிக்காயை உணவாக உட்கொண்டால் நமது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மிக விரைவாக உறிஞ்சப்பட்டு குறைக்கப்படும்.

உடலில் உள்ள உப்பு சமநிலையை சீராக வைக்க‌ பொட்டாசியம் பயன்படுவதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்த முடியும். இந்தப் பொட்டாசியம் நாம் அன்றாடம் உண்ணும் கத்தரிக்காயில் உள்ளது.

சிறு தானியங்கள் :

சிறு தானியங்களை உண்ணும் பழக்கம் நமது ஆதித் தமிழர் காலத்திலிருந்தே உள்ளது. காரணம் அவற்றிலுள்ள சத்த்துக்கள் எண்ணற்றது. கம்பு, சோளம் போன்ற தானிய வகைகளில் புரதம், சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும் உயர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. இவை செரிமான தன்மையை அதிகரித்து உடலின் வெப்பத்தை சமநிலையில் வைப்பதோடு உடலுக்கு வேண்டாத கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.

பார்லி கஞ்சி :

அரிசியைவிட மாவுச்சத்து குறைவாக உள்ள இந்தப் பார்லி இயற்கையாகவே உடல் எடையைக் குறைப்பதற்கும் இருதய நோய்க்கும் மிக நல்லது. இதிலிருக்கும் ப்ரோபியானி எனப்படும் அமிலம் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. இதை இதய நோயாளிகளுக்கான உணவு எனவும் சொல்லலாம். தினமும் காலையில் பார்லி கஞ்சி குடித்துவிட்டு வேலைக்குச் செல்லுங்கள். உடல் இரும்பு போல் மாறிவிடும். எங்கேயும் அதிகப்படியான கொழுப்பு இருக்காது.

பட்டை :

பட்டையும் உடல் எடை குறைப்பிற்காக அட்டகாசமான உணவிப்ம்பொருள் என்பதில் சந்தேகமில்லை. தினமும் அரை ஸ்பூன் பட்டைப் பொடியை உணவில், சேர்த்துக் கொள்ளுங்கள். இது உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திடும். கொழுப்புகளையும் கரைக்கும் ஆற்றல் கொண்டவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here