சீனா ஏரியில் பிரமாண்ட சூரிய மின் உற்பத்தி நிலையம்!

0
47

சீனா ஏரியில்  பிரமாண்ட சூரிய மின் உற்பத்தி நிலையம்!

சீனாவின் அனுய் மாகாணத்தில் உள்ள ஹுவாய்நான் நகரத்து ஏரியில் மிகப்பெரிய சூரிய மின் ஆற்றல் உற்பத்தி நிலையத்தை கட்டமைத்துள்ளது. கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிந்து ஆலை செயல்படுவதற்கு தயாராகவும் இருக்கிறது. இதன் மொத்த பரப்பளவு மொத்தம் 8 லட்சம் சதுர மீட்டர் ஆகும். உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம் இதுவே. இதன் மூலம் 40 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து அதை 15 ஆயிரம் வீடுகளுக்கு வழங்க முடியும்.

ஏரியில் 1 லட்சத்து 60 ஆயிரம் எண்ணிக்கையிலான போட்டோ ஓல்டிக் பேனல்கள் அடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு குந்தகம் ஏற்படாத வண்ணம் மின்சாரத்தை தயாரிக்க முடியும்.

ஆனால் இந்தியாவில் விவசாய நிலங்களை அழித்து, பூமிக்கடியில் உள்ள ஈரப்பதத்தை போக்கி மீத்தேன் எடுத்து ஆற்றல் உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழலை அழித்து ஆற்றல் உற்பத்தி செய்யும் இந்தியா சீனாவை போன்ற ஆக்கப்பூர்வமான ஆற்றல் உற்பத்தி செய்ய வேண்டுமென்பதே மக்களின் வேண்டுகோள். இந்திய அரசு மக்களுக்கான அரசாக திகழ வேண்டும்.

சில நாட்களுக்கு முன்பாக அமெரிக்கா பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. இதையடுத்து அந்த ஒப்பந்தத்தை முன்னின்று செயல்படுத்தும் பொறுப்பும் வாய்ப்பும் தற்போது சீனாவுக்கே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here