தங்கம் வென்றார் மீராபாய் சானு!

0
38

தங்கம் வென்றார் மீராபாய் சானு!

அமெரிக்காவில் 2017 ஆம் ஆண்டுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைப்பெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு தங்க பதக்கம் வென்றுள்ளார்.

48 கிலோ எடை பிரிவில் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டார் மீராபாய். இதில் 194 கிலோ எடையை தூக்கி தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். 193 கிலோ தூக்கி தாய்லாந்தை சேர்ந்த துண்யா சுக்சரோன் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி வென்றார். கொலம்பியாவைச் சேர்ந்த அனா ஐரிஸ் செகுரா 182 கிலோ தூக்கி வெண்கலம் வென்றார். இந்தியாவைச் சேர்ந்த சஞ்சிதா சானு 5-வது இடம் பிடித்தார். 1995 ல் சீனாவில் கர்ணம் மல்லேஸ்வரி தங்கம் வென்ற பின்னர் இது உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா பெறும் முதல் பதக்கம் ஆகும்.

மணிப்பூரில் ஒரு எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர் சானு. தற்போது இந்திய ரெயில்வேயில் பணியாற்றி வருகிறார். தங்கம் வென்றதை குறித்து அவர் கூறியது இந்த வெற்றிக்காக என் பயிற்சியாளர் விஜய் ஷர்மாவுக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன். நாங்கள் கடினமாகவும், நம்பிகையுடனும் உழைத்தோம். இதை 020 டோக்கியோவில் இதே சாதனை நிகழ்த்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here