மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும் உணவுகள்:

0
30

மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும் உணவுகள்:

உணவு என்பது உயிர் வாழ நமக்கான நாடி துடிப்பாக அமைகிறது. ஆனால் அதற்கு ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். உண்ணும் உணவே மருந்தாக அமையும் என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள் அல்லவா? ஆம், அது நூற்றுக்கு நூறு உண்மையாகும். உணவை கொண்டே பல நோய்களை குணப்படுத்தலாம். அப்படி சில வகை உணவுகளால், மனதை அமைதிப்படுத்த முடியும்.

சாக்லெட்

சாக்லெட்களுக்கான உங்கள் ஏக்கத்தை தீர்த்துக் கொள்ளுங்கள். அதில் உள்ள அனான்டமைன் மூளையில் உள்ள டோபமைன் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். அதனால் மனம் அமைதி பெற்று மன அழுத்தம் நீங்கும்.

நட்ஸ்

நட்ஸில் செலினியம் என்ற கனிமம் உள்ளது. இந்த கனிம குறைபாட்டினால், சோர்வு மற்றும் படபடப்பு ஏற்படும். அதனால் ஒரு கை நட்ஸ்களை உண்டால், மனம் அமைதியாக இருக்கும்.

கீரை வகைகள்

பாப்பாய் என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்திற்கு பிடித்த ஸ்பினாச் என்ற பசலைக் கீரையில் மக்னீசியம் வளமையாக உள்ளது. இது மனதை அதீத செயலாற்றலில் இருந்து பாதுகாக்கும். வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச்சத்து உணவில் இருந்தால், அதுவும் மனதை சாந்தமாக்கும்.

பாஸ்தா

முழு தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாஸ்தாவில் மக்னீசியம் வளமையாக உள்ளது. இந்த மக்னீசியம் குறைபாடும், மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

கோதுமை பிரட்

முழு தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் கோதுமை பிரட்டுகளுக்கும் பாஸ்தாவை போன்ற குணங்கள் உண்டு. அதனால் உணவில் சாண்ட்விச், ரொட்டி ஆகியவற்றை சேர்த்துக் கொண்டால், மன அழுத்தத்தை நீக்கலாம்.

ப்ளூ பெர்ரி

சுவைமிக்க பழமான இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இது மன அழுத்தத்தை நீக்கி அமைதியை ஏற்படுத்தும்.

பாதாம்

பாதாமில் ஜிங்க் மற்றும் வைட்டமின் பி12 உள்ளதால், இதனையும் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். ஊட்டச்சத்துள்ள இந்த உணவு, மன நிலையை சீராக வைத்து டென்ஷனை குறைக்கும்.

க்ரீன் டீ

உங்களுடைய பொழுதை ஒரு கப் க்ரீன் டீயுடன் தொடங்கினால், அதை விட மன அமைதி வேறு எதிலும் கிடையாது. சொல்லப்போனால் பல பிரச்சனைகளுக்கு அது உடனடி நிவாரணம் அளிக்கிறது.

மீன்

சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்களில் ஒமேகா-3 கொழுப்பமிலம் வளமையாக உள்ளதால், அது மூளைக்கு செலினியம் மற்றும் ட்ரிப்டோபைனை செலுத்தும். அதனால் மனம் அமைதியாக இருக்கும்.

ஓட்ஸ்

உடம்பில் உள்ள செரோடோனின் அளவை ஓட்ஸ் அதிகரிக்க வைப்பதால், அது உடம்பில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, மனதை அமைதிப்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here