ப்ளாக்பெர்ரி போன்கள் இனி இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.!

0
187

ப்ளாக்பெர்ரி போன்கள் இனி இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.!

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ப்ளாக்பெர்ரி தனது நிறுவனத்தின் போன்களை இந்தியாவில் தயாரிக்கக்கூடிய வகையில் டெல்லியை தலைமை இடமாகக்கொண்டு செயல்படும் ஆப்டிமஸ் இன்ப்ராகாம் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.
தயாரிக்கவும் விற்கவும்:
ப்ளாக்பெர்ரி நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக ஆப்டிமஸ் நிறுவனம் ப்ளாக்பெர்ரி நிறுவன மொபைல் போன்களை இனி இந்தியாவிலேயே தயாரிக்க இயலும்.

மேலும் இந்தியா,இலங்கை,வங்காளதேசம்,நேபால் உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யவும் இயலும்.மேலும் ப்ளாக்பெர்ரி நிறுவனம் ஆப்டிமஸ் நிறுவனத்திற்கு தனது மென்பொருளை வழங்கும்.

மேக் இன் இந்தியா:
இந்த ஒப்பந்தம் குறித்து இரு நிறுவனங்களின் கூட்டறிக்கையில் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையிலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிற முயற்சியாகவும் இது அமையும் எனக் கூறப்பட்டுள்ளது.மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here