வெண்ணைய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் !!

0
26

வெண்ணைய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் !!

வெண்ணெய் என்றவுடன் அது சில வீடுகளில் மாட்டியிருக்கும் ஃப்ரேம் போட்ட படத்தில் இருக்கும் கிருஷ்ணர்,அவரது காதைத் திருகி கோபத்துடன் முறைக்கும் யசோதை தான் நினைவுக்கு வரும்.
சத்துக்கள் :
வெண்ணையில் அதிகமாக கொழுப்புச்சத்து மட்டுமே உள்ளது. அது தவிர குறைந்த அளவு விட்டமின் ஏ இருக்கிறது. இதைத் தவிர வேறு எந்த சத்துக்களும் வெண்ணையில் கிடையாது.
குழந்தைகள் :
குழந்தைகளுக்கு வெண்ணையை தாராளமாக கொடுக்கலாம். குறிப்பாக எடைக்குறைவுடன் இருக்கும் குழந்தைகளுக்கு இதனை கொடுக்கலாம். அதே போல குழந்தைகளுக்கு காலை நேரங்களில் மட்டும் வெண்ணையை கொடுங்கள் இரவு நேரங்களில் கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.
பெரியவர்கள் :
குழந்தைகளைத் தவிர,விளையாட்டு வீரர்கள், உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் வெண்ணெயை உணவுடன் அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம். காச நோயால் அவதிப்படுபவர்களுக்கு வெண்ணெய் மிகவும் நல்லது. இது நீண்ட நேரத்திற்கு உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுத்திடும்.
தவிர்ப்பது நல்லது :
வெண்ணையை எல்லாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதயநோய், உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், வெண்ணெய் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் வெண்ணையில் இருக்கும் கலோரி எளிதில் கரையாது. இதனால் உடலில் உள்ள கொழுப்பின் அளவும் அதிகரிக்கும்.
பயன்பாடு :
வெண்ணையை பிரட்டுடன் மட்டுமல்ல பொங்கல், சப்பாத்தி, சாம்பார் போன்ற உணவுகளுடன் சிறிதளவு சேர்க்கலாம். இது சுவையை அதிகரிக்கும். அதே போல் வெண்ணையை அதிகமாக எடுத்துக் கொண்டால், பசி எடுக்கும் தன்மையைக் குறைந்துவிடும். அதிகமாக வெண்ணெய் பயன்படுத்துவதால் இதயம் சார்ந்த நோய்கள், சர்க்கரை நோய் போன்றவை ஏற்படும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here