விளக்கு தானாக நின்றுவிட்டால் கெட்ட சகுனமா ?

0
51

விளக்கு தானாக நின்றுவிட்டால் கெட்ட சகுனமா ?

நம் வீடுகளில் விளக்கேற்றிய சில நிமிடங்களில் எப்போதாவது விளக்கு தானாக நின்றுவிடும். அதே போல சிலர் விளக்கு பூஜை செய்யும் சமயணங்களில் திடீரெனெ விளக்கின் ஓர் இரு முகங்கள் சில நேரம் தானாக நின்றுவிடும். இது பெரும் அபசகுனமா ? இதற்காக ஏதாவது பரிகாரம் செய்யவேண்டுமா ? என்பது பற்றி பார்ப்போம் வாருங்கள்.

vilaku

நாம் அனைவரும் விளக்கேற்றி இறைவனை துதிப்பதற்கான முக்கிய காரணமே மன அமைதிக்காக தான். மனமானது அமைதி அடைந்தால் நமது வாழ்வில் இன்பம் தானாக வரும். ஆனால் நாம் இறைவனுக்காக ஏற்றிய விளக்கானது நின்று விட்டால் மன அமைதியை இழக்கிறோம். அது ஏதோ கெட்ட சகுனம் என்று நமக்கு நாமே புலம்ப ஆரமிக்கிறோம்.

தீபமானது நீண்ட நேரம் எரியும்போது சில நேரங்களில் காற்றின் வேகத்தால் அனைய வாய்ப்புள்ளது. அதேபோல விளக்கில் எண்ணெய் குறைந்து போவது, திரி சரி இல்லாமல் இருப்பது என விளக்கு நிற்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இதற்கும் சகுனத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.

vilaku

நாம் பூஜை செய்யும் சமயங்களை விளக்கு தானாக நின்றால், அது ஏன் நின்றது என்ற காரணத்தை அறிந்து அதை சரி செய்வதே சிறந்தது. அதை விடுத்தது தேவை இல்லாமல் கவலைகொள்ள தேவை இல்லை.

vilaku

இதையும் மீறி உங்களது மனம் கவலை கொண்டால் கோயிலிற்கு சென்று உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயரில் ஒரு அர்ச்சனை செய்யுங்கள். இந்த அர்ச்சனை கூட உங்கள் மன நிம்மதிக்காகவே தவிர சகுனத்திற்காக அல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here