நீங்க சமைக்கும் விதத்தால் கூட உணவிலுள்ள கால்சியம் சத்து அழிந்து போகும் !

0
24

நீங்க சமைக்கும் விதத்தால் கூட உணவிலுள்ள கால்சியம் சத்து அழிந்து போகும் !

கால்சியம் எலும்பு மற்றும் பற்களுக்கு மட்டுமே அவசியம் என நீங்கள் நினைத்தால் அது தவறு. ரத்தம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கும் இது தேவையாகிறது.
ரத்த உறைதலுக்கும், இதயத் துடிப்பிற்கு மற்றும் தசைகள் இயங்குவதற்கும் கால்சியம் அவசியம் தேவை. சில சமயம் கால்சியல் அளவு உடலில் பற்றாக்குறையாகும். இதற்கு சரியாக கால்சியம் நமது உடலால் உறிஞ்சப்படாததால் ஏற்படும் விளைவுதான் கால்சியம் பற்றாக்குறை .
இதனால் உடலில் பல்வேறு பாகங்கள் பலப் பிரச்சனைகளுக்கு தள்ளப்படுகின்றன. கால்சியம் உறியபடாமல் போவதற்கு பல காரணங்கள் உள்ளன.
அதிகப்படியான காஃபி, டீ மற்றும் மது குடிப்பது, புகைப்பிடிப்பது , சூரிய வெளிச்சமே படாமல் இருப்பது போன்றவை கால்சியம் உறிவதை தடை செய்கின்றன.
சமைக்கும் விதம் 
நீங்கள் என்னதான் பார்த்து பார்த்து காய்கறிகள் வாங்கினாலும். நீங்கள் சமைக்கும் விதத்தால் சத்துக்கள் அழிந்துவிடும். அதிக வெப்ப நிலையில் சமைத்தால் , காய்கறிகளிலுள்ள சத்துக்கள் அழிந்துவிடும் என்பது தெரியுமா? இதன் காரணமாகவே நீங்கள் சமைக்கும் நேரமும், காய்கறிகளின் நன்மைகளும் கிடைக்காமல் வீணாகி விடும். எனவே மிதமான வெப்ப நிலையில்தான் சமைக்க வேண்டும்.

அதிகமாக உண்ண வேண்டிய பொருட்கள் 

கால்சியம் அதிகம் நிறைந்த உணவுகளை அதிகப்படுத்துங்கள். அவரவர் உடலுக்கு தகுந்தாற்போல் கால்சியம் அளவு வேறுபடும். பொதுவாக பெரியவர்களுக்கு குறைந்தது 1200 மி.கி/ நாள் தேவைப்படுகிறது.
கால்சியம் நிறைந்த உணவுகள்
சீஸ், பனீர், புரொக்கோலி, முட்டை, மீன், சோயா, மற்றும் கொண்டைக்கடலை போன்றவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் கால்சியம் உள்ளது. பாலில் மிக அதிக கால்சியம் இருப்பதால் பசும்பாலை தினமும் இரவில் எடுத்துக் கொள்ள வேண்டும். கீரையிலும் அதிக கால்சியம் இருக்கிறது, வாரம் 4 நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
காலை மற்றும் மாலை வெயிலில் 10 நிமிடமாவது நடந்து வாருங்கள். விட்டமின் டி பற்றாக்குறை இருந்தால் கால்சியம் பற்றாக்குறையும் ஏற்படும். விட்டமின் டி முழு வீச்சாக சூரியனிடமிருந்துதான் நீங்கல் பெற்றாக வேண்டும். அது தவிர்த்து சில உணவுகளிலும் இருக்கின்றது.
விட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள் 
மீன் எண்ணெய், முட்டை, மஷ்ரூம், சூரிய காந்தி எண்ணெய், சால்மன் மீன், பால் போன்றவற்றில் அதிக விட்டமின் டி இருக்கின்றது. முக்கியமாக கடல் உணவுகளை சாப்பிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here