சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரச் செய்யும் ஊமத்தைங்காய்!!

0
29

சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரச் செய்யும் ஊமத்தைங்காய்!!

கூந்தல் உதிர்வது சாதரண பிரச்சனை என்றாலும் அதிலும் அளவோடு இருந்தால்தான் நல்லது

முடி உதிர்வு பருவத்திற்கு தகுந்தாற்போல் மாறினாலும், சிலருக்கு எப்போதுமே உதிர்ந்து கொண்டிருக்கும். இன்னும் சிலருக்கு கொத்து கொத்தாய் உதிரும். அது நல்லதல்ல. அப்படியே விட்டுவிட்டால் சொட்டை விழுந்துவிடும்.

மரபு ரீதியாக மட்டுமின்றி சிலருக்கு சரியாக பராமரிக்காமல் போனாலும் சொட்டை விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஊமத்தைங்காய் :

பிஞ்சு ஊமத்தைங்காயை அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து தலைக்கு குளியுங்கள். இப்படி செய்தால் சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரும்.

வாரம் ஒரு நாள் கட்டாயம் செய்து பாருங்கள். தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு எல்லாம் மறைந்து முடி வளர ஆரம்பிக்கும்.

 

கருமையான முடி கிடைக்க :

அவுரி இலை பொடி எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் தவிர்க்கப்படாத ஒன்று. இது நரைமுடியை கருப்பாக மாற்றுவதற்காக ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. அது கருமையாக மாற்றுவதோடு, முடியின் வளர்ச்சியையும் தூண்டும்

தேவையான பொருட்கள்:

அவுரி இலை

மருதாணி இலை

 செய்முறை:

அவுரி இலையுடன், மருதாணி இலையை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் செம்பட்டை முடி கருமையாக மாறும்.

நரை முடி மறைய :

கரிசலாங்கண்ணி நரை முடியை கருமையாக மாற்றும் அற்புத மூலிகையாகும். அதனை பயன்படுதும் முறையில் பயன்படுத்தினால்தான் அதனுடைய முழுப் பலனும் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை பழச்சாறு.

கரிசலாங்கண்ணிச்சாறு.

பால்.

நல்லெண்ணெய்.

செய்முறை:

எலுமிச்சை பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் எல்லாகற்றையும் சமமாக அரைலிட்டர் அளவு எடுத்து ஒன்றரை லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி ஆறு மாதத்திற்குமேல் தலைமுடியில் தேய்த்து வந்தால் நரை முடி குறையும்.

பொடுகு குறைய :

செம்பருத்திப் பூ கூந்தலை அற்புதமாக வளரச் செய்யும். செம்பருத்தி, துளசி, வெட்டிவேர் கலந்த எண்ணெய் கூந்தலை நீண்டு வளரச் செய்யும் . மேலும் பொடுகை முழுவதும் கட்டுப்படுத்தும்.

செம்பருத்தி பூ.

துளசி விதை.

வெட்டிவேர்.

தேங்காய் எண்ணெய்.

செய்முறை:

தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி பூவை நன்றாக காய வைத்து போட்டு அதனுடன் துளசி விதை மற்றும் வெட்டிவேர் இரண்டையும் சேர்த்து போட்டு நன்றாக காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு குறையும்.

கருமையாக முடி வளர :

மாசிக்காய் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதனை வாங்கி வாரம் 2 நாட்கள் பயன்படுத்துங்கள். பக்க விளைவுகளில்லாதது.

தேவையான பொருட்கள்:

மாசிக்காய்

பால்

செய்முறை:

மாசிக்காயை எடுத்து பொடி செய்து அந்த தூளை தண்ணீர் அல்லது பாலில் குழைத்து தலை முடியில் தடவி ஊற வைத்துக் குளித்து வந்தால் தலை முடி கருமையாக மாறும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here