எய்ட்ஸ் நோய்க்கு பசு மாட்டில் இருந்து மருந்து: – அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

0
58

எய்ட்ஸ் நோய்க்கு பசு மாட்டில் இருந்து மருந்து அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

பசு மாட்டின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இருந்து எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் புதிய வழிமுறையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். விஞ்ஞான இதழான Nature-ல் இதுகுறித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அமெரிக்க விஞ்ஞானிகள் பசுவினைக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொண்டு தங்களது புதிய கண்டுபிடிப்பினை வெளியிட்டுள்ளனர். அதில் 4 பசு கன்றுகளுக்கு ஹெச்.ஐ.வி வைரஸை செலுத்தி ஆராய்ச்சி மேற்கொண்ட விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியமான முடிவு கிடைத்துள்ளது.

ஹெச்.ஐ.வி வைரஸ் செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே அதை எதிர்கொள்வதற்கான சக்திவாய்ந்த ஆண்டி-பயோடிக்களை பசுவின் நோய் எதிர்ப்பு மண்டலம் சுரந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஹெச்.ஐ.வி வைரஸ்களுக்கு எதிராக பசுவின் உடலின் உருவான ஆண்டி-பயோடிக்களை பிரித்தெடுத்த அமெரிக்க விஞ்ஞானிகள், அதனை மனிதனுக்கு பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மனிதன் உடலில் ஏன் இத்தகைய சக்திவாய்ந்த ஆண்டி-பயோடிக் உருவாவதில்லை என்பது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்தது அமெரிக்காவின் National Institute of Allergy and Infectious Diseases நிறுவனத்தின் தடுப்பூசித்துறை இயக்குந ஜான் மாஸ்கோலா கூறியதாவது: “எய்ட்ஸ் நோய்க்கான நேரடியான தடுப்பூசியை கண்டுபிடிக்க இப்போது நடைபெற்றுள்ள ஆய்வுகள் போதுமானவையில்லை. மேலும் ஹெச்.ஐ.வி வைரஸ் மனித நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இருந்து எவ்வாறு தப்பிக்கிறது என்பது குறித்தும் எவ்வித முடிவுகளும் இந்த சோதனையில் வந்தடையவில்லை. இருந்தாலும் இந்த முடிவுகளால் எய்ஸ்ட்க்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளோம் என்பது மட்டும் உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here