சி.எஸ்.கே. அணியில் தோனி, ரெய்னா…

0
53

சி.எஸ்.கே. அணியில் தோனி, ரெய்னா… 

சென்னை சூப்பர் கிங்க்ஸ் என்பது ஐ.பி.எல். அணிகளின் ஒரு பகுதி என்றாலும், இந்தியா முழுக்க அனைத்து தரப்பு ரசிகர்களிடத்தும் இந்த அணிக்கு பலத்த செல்வாக்கு உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் உள்ள ஐ.பி.எல். ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கே சப்போர்ட் செய்வதாக ஃபேஸ்புக்கே மேப் வெளியிட்டு, ரசிகர்களை விசில் போடச் சொல்லி குதூகலப்படுத்தியது. ஐ.பி.எல். அணிகளிலேயே தனக்கான அதிக ரசிகர்களையும், முக்கியத்துவத்தையும், வெற்றிகளையும் தக்க வைத்துக்கொண்ட ஒரே அணி நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான்.

சூதாட்டம் பாரிய குற்றச்சாட்டுகளால் 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டிருக்கும் இந்த அணி 2௦18ம் ஆண்டு ஐ.பி.எல். மைதானத்தில் சிங்கமென சீறிப் பாய்வதை நாமெல்லாம் விசில்கள் பறக்க, அரங்கம் அதிர பார்த்து ரசிக்கத்தான் போகிறோம். தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ ஆகிய வீரர்களை சென்னை அணி தக்க வைத்துக்கொள்ளப் போகிறது என்பது சின்ன குழந்தைக்கும் தெரியும்.

ரசிகர்களின் அடி மனதுடனும், உணர்வுகளுடனும் இப்படியாக பின்னி பிணைந்துவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பற்றிய சுவாரசிய தகவல்களை இக்கட்டுரையில் கொடுத்துள்ளோம்.

அடிடா விசில... சி.எஸ்.கே. அணியில் தோனி, ரெய்னா... கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்!

#1 சொந்த மண்ணில் வென்ற ஒரே அணி:

2011ம் ஆண்டு சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். டி20 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. அந்த போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை தூக்கி அடித்தது நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ். ஐ.பி.எல். வரலாற்றிலேயே சொந்த மண்ணில் விளையாடி கோப்பையை வென்ற முதல் அணி நம்ம சி.எஸ்.கே.தான்.

அடிடா விசில... சி.எஸ்.கே. அணியில் தோனி, ரெய்னா... கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்!

#2 தொட்டதெல்லாம் வெற்றி:

ஐ.பி.எல். வரலாற்றிலேயே தொடர் வெற்றிகளை சுவைத்த ஒரே அணி நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் தான். 2010ம் ஆண்டு இரண்டு முறை கோப்பையை வென்ற அணியும் நமதே. அந்த ஆண்டின் ஐ.பி.எல். டி20 மற்றும் சேம்பியன்ஷிப் டி20 என இரண்டு போட்டிகளிலும் அதிரி புதிரியாக விளையாடி வென்றது. தொடர்ந்து 2011 ஐ.பி.எல். டி20, 2014 ஐ.பி.எல். டி20 போட்டிகளில் செம்…ம்ம வெற்றியை பெற்றது.

அடிடா விசில... சி.எஸ்.கே. அணியில் தோனி, ரெய்னா... கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்!

#3 இரண்டாவது காஸ்ட்லியான அணி:

ஐ.பி.எல். அணிகளிலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிறகு, அதிக பிராண்ட் மதிப்பினை கொண்ட அணியாக விளங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். அமெரிக்க டாலரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதிப்பு $100 மில்லியன் ஆகும்.

அடிடா விசில... சி.எஸ்.கே. அணியில் தோனி, ரெய்னா... கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்!

#4 டோனிக்கு பெரும் விலை:

ஐ.பி.எல். அணிகளிலேயே பெரும் விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஒரு கேப்டனை கொண்ட அணியாக விளங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். தல டோனியை $1.5 மில்லியன் கொடுத்து வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசிலா போடு மச்சி. 2009ம் ஆண்டு நடந்த ஏலத்தில், இங்லீஷ் ஆல்-ரவுண்டர் ஆன்ட்ர்யூ ஃப்ளின்டாப்பை $1.55 மில்லியன் கொடுத்து வாங்கிய ஒரே அணியும் நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான்.

அடிடா விசில... சி.எஸ்.கே. அணியில் தோனி, ரெய்னா... கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்!

#5 தமிழின் அடிப்பையில் பெயர்:

நாட்டின் தென் கோடியில் உள்ள சென்னை நகரின் பேச்சு வழக்கினை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட பெயர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ். நாம் சூப்பர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக ‘செம்ம’ என்பதையும், சிங்கம்டா என்ற வட்டார வழக்கையும் அடிப்படியாக கொண்டு உருவாக்கப்பட்டது. சிங்கம் காட்டின் ராஜா. எனவே கிங்ஸ். இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடைய பெயர் காரணம் என இந்தியாவே பேசியது.

அடிடா விசில... சி.எஸ்.கே. அணியில் தோனி, ரெய்னா... கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்!

#6 ஆடை வடிமைப்பு:

2014ம் ஆண்டு வரை Reebok நிறுவனம்தான் நம் சி.எஸ்.கே. சிங்கங்களுக்கு ஆடை வடிவமைத்து கொடுத்திருந்தது. பிறகு 2015ம் ஆண்டில் ஆடை சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆஸ்திரேலிய நிறுவனமான Spartan ஆடைகளை வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடிடா விசில... சி.எஸ்.கே. அணியில் தோனி, ரெய்னா... கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்!

#7 தடை முடிந்தது:

அடைந்த 2005ம் ஆண்டு சூதாட்ட புகாரின் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயன்ஸ் அணிகளுக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டு தடை விதித்தது. அந்த தடை இன்றுடன் முடிவடைகிறது. வரும் 2008ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. இந்த நிலையில் சி.எஸ்.கே.வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “வந்துட்டோம்னு சொல்லு… திரும்ப வந்துட்டோம்னு சொல்லு” என ட்வீட்டப்பட்டது. இப்போது தல தோனியும் மீண்டும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்குள் வந்துள்ளார். ரசிகர்கள் வழக்கத்தை விட அதிகமாகவே மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here