சர்வதேச பசி பட்டியலில் முதல் இடத்தில் மத்திய ஆப்பிரிக்க குடியரசு! உணவு கொள்கை ஆராய்ச்சி மையம் தகவல்

0
42

சர்வதேச பசி பட்டியலில் முதல் இடத்தில் மத்திய ஆப்பிரிக்க குடியரசு! உணவு கொள்கை ஆராய்ச்சி மையம் தகவல்.

சர்வதேச பசி பட்டியலில் இந்தியா 100வது இடத்தில் உள்ளது. 2017ம் ஆண்டில் உலகளாவிய பசி பட்டியலில் இடம்பெற்ற 119 நாடுகளில் இந்தியா 100வது இடத்தில் இருக்கிறது. வாஷிங்கடனைச் சேர்ந்த சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி மையம், உலக நாடுகளின் இந்தப் பசி தொடர்பான அறிக்கையை வெளியிட்டது. இந்தப் பட்டியலில், நேபாளம், மியான்மர், வங்கதேசம், வடகொரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளைவிட இந்தியா பின்தங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு, 97வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு மூன்று இடங்கள் பின்னுக்குச் சென்றிருக்கிறது.
குழந்தைகளின் அதிகபட்ச ஊட்டச்சத்து குறைபாடு, சமூகத் துறைகளில் தேவைப்படும் அர்ப்பணிப்பு போன்றவற்றை இந்தியாவில் நிலவும் பசி பிரச்சினைக்குக் காரணம் என்று சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில், முதல் இடத்தில் மத்திய ஆப்பிரிக்க குடியரசு உள்ளது. ஏழைகளின் பசியை போக்க பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here