Home News தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு செய்திகள்

Tamil Nadu News | video | Tamil nadu news for jallikattu

சமையல் எண்ணெய் பாக்கெட்களில் ‘கொலஸ்ட்ரால் இல்லை’ வாசகத்திற்கு தடை

சிவகங்கை: சமையல் எண்ணெய் பாக்கெட்களில் 'கொலஸ்ட்ரால் இல்லை'என்ற வாசகம் எழுதுவதற்கு உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது. கடலை, சூரியகாந்தி, தேங்காய், எள் போன்ற தாவரங்களில் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்களில் இயற்கையாகவே 'கொலஸ்ட்ரால்' இல்லை. ஆனால் சில எண்ணெய் நிறுவனங்கள் மக்களை கவரும் வகையில் தங்களது தயாரிப்பில் 'கொலஸ்ட்ரால்' இல்லை என...

காற்றில் பறந்த அரசு பஸ்சின் மேற்கூரை : அச்சத்தில் அலறிய பயணிகள்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணிகளுடன் சென்ற அரசு பஸ்சின் கூரை காற்றில் பறந்ததால் பயணிகள் அலறினர். பின்னர் பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பப்பட்டனர். திருநெல்வேலி அரசு போக்குவரத்துக்கழகத்தின் நாகர்கோவில் கிளையின் ராணித்தோட்டம் பணிமனையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்- ஞாலம் டவுண் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று மதியம் இந்த...

அசாத்திய திறன்கள்… அசத்தும் அரசு ஆரம்ப பள்ளி குழந்தைகள்

வேலூர்: வேலூர் மாவட்டம் ராஜாவூரில் உள்ள அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு திறன்களால் எல்லோரையும் ஈர்த்து வருகிறார்கள். ஒரு தலைமை ஆசிரியை மற்றும் ஒரே ஒரு உதவி ஆசிரியரைக் கொண்டு இயங்கும் அரசுப்பள்ளி ராஜாவூரில் உள்ளது. இந்தப் பள்ளியில், 36 மாணவ - மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்....
video

ஓ மை காட்.. ஏசி மெஷினில் யார் தொங்கறா பாருங்க!

சென்னை: ஒரு வீட்டின் ஏசியில் எலியை கவ்விக் கொண்டு பாம்பு வெளியே வந்தது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக நம் அறையில் எலி, கரப்பான்பூச்சி, பல்லி உள்ளிட்ட ஜந்துக்கள் நுழைந்து விட்டால் அவை வெளியேறும் வரை நாம் வழிமேல் விழி வைத்து காத்திருப்போம். அதுவும்...

அமலை செடிகள் ஆக்கிரமிப்பு எதிரொலி.. சுவை மாறும் குடிநீரால் பொதுமக்கள் தவிப்பு

தூத்துக்குடி: அமலை செடிகள் தேங்கியதால் குடிநீர் சுவை மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணையில் வடகால், தென்கால் பாசன வாய்க்கால்கள் மூலமாக 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆண்டு தமிழகத்தில்...

அரசின் ஆவின் பாலில் புழுக்களா? சமூகவலைதளங்களில் பரவும் படத்தால் அதிர்ச்சி!

சென்னை: ஆவின் பாலில் புழுக்கள் இருப்பது போன்ற படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. ஆவின் பால்தான் சுத்தமான பால் என அமைச்சர் கூறி வரும் நிலையில் புழு உள்ள படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ரஜேந்திர பாலாஜி ஆவின் பால் மட்டும் தான் நல்ல பால். மற்ற...

மருது சகோதரர்களின் முதல் சுதந்திரப் போர் பிரகடனம் வெளியான நாள்… இன்று

சென்னை: ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக 216 ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி. 1801 ஆம் ஆண்டு தென்னிந்திய நாடுகளின் கூட்டணியை உருவாக்கி வரலாற்றுச் சிறப்புமிக்க நாவலந்தீவு பிரகடனம் எனும் ஜம்புதீவு பிரகடனத்தை மருது சகோதரர்கள் வெளியிட்ட நாள்தான் ஜூன் 12. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான முதல்...

சென்னை அண்ணா சாலையில் சுரங்க மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி செப்டம்பரில் முடியும்

அண்ணா சாலையில் தோண்டப் பட்டுள்ள சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்பாதை அமைக்கும் பணி செப்டம்பரில் நிறைவடையும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறினர். சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இதில், சைதாப்பேட்டையில் இருந்து மே தினப் பூங்கா...

வீட்டில் இருக்க முடியவில்லை.. மண்டபத்தில் வைத்து சோறுபோடுங்கள்.. தி நகர் மக்கள் வாய்ஸ்

சென்னை: தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக அப்பகுதி மக்களை வெளியேறுமார் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், நாங்கள் எங்ககே செல்வது? என கேள்வி எழுப்பியுள்ளனர். அரசே ஒரு மண்டபத்தில் அமர வைத்து சாப்பாடு வழங்க வேண்டும் என்றும்...

திகு திகுவென எரியும் சென்னை சில்க்ஸ்.. தி.நகர் கடைகள் அடைப்பால்.. ஒரே நாளில் 50 கோடி நஷ்டம்

சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் தியாகராயர் நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் 50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தியாகராயர் நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது....
- Advertisement -

LATEST NEWS

MUST READ