வங்கியில் போட்ட டெபாசிட்களுக்கு ஆபத்து..நடுத்தர குடும்பத்தினர் சேமிப்பை எடுக்க முடியுமா? புதிய சட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு

0
21

வங்கியில் போட்ட டெபாசிட்களுக்கு ஆபத்து..நடுத்தர குடும்பத்தினர் சேமிப்பை எடுக்க முடியுமா? புதிய சட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு.

வங்கியில் சாமானிய மக்கள், நடுத்தர குடும்பத்தினர் போட்டுள்ள டெபாசிட் பணத்தை முழுவதுமாக உடனே திருப்பித்தர வேண்டிய அவசியம் வங்கிகளுக்கு இல்லை என்பது போன்ற சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது.

வங்கிகளை நஷ்டத்தில் இருந்து மீட்கவும், வங்கிச் சீர்திருத்தங்கள் செய்யவும், “வங்கித் தீர்மானம் மற்றும் டெபாசிட் காப்பீடு மசோதா 2017 ’’ என்ற மசோதாவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. இந்த மசோதாவில் சாமானிய மக்களின் சேமிப்புகளையும், டெபாசிட்களையும் முடக்கும் வகையில் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா சட்டமாக நிறைவேறினால்,  வங்கிகளை இழப்பில் இருந்து காக்கும் வகையில் ‘தீர்மானம் கழகம்(ரெசலூஷன் கார்பரேஷன்) என்ற அமைப்பு உருவாக்கப்படும். இந்த தீர்மானம் கழகம் வங்கிகளை திவாலாகவிடாமல் காப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்.

வாராக்கடன் வசூலில் வங்கிகளுக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. வாராக்கடன்வசூலிப்பில் வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துப் பார்த்தும் அதில் 20 சதவீதம் மட்டும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், அரசு வங்கிகளின் திவால் சூழலை உணர்ந்த மத்திய அரசு ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு தொகையாக வழங்குவதாக உறுதியளித்தது. வங்கிகள் எதிர்காலத்தில் திவாலாகா வகையில் காப்பதற்காக தீர்மானம் கழகம் உருவாக்கப்பட உள்ளது.

இந்த “வங்கித் தீர்மானம் மற்றும் டெபாசிட் காப்பீடு மசோதா 2017 ’’ என்ற மசோதாவை மோடி தலைமையிலான அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டு வந்தது. ஆனால், தற்போது, இந்த மசோதா நாடாளுமன்றத்தின் தேர்வுக்குழுவின் முன் பரிசிலனைக்கு இருக்கும் நிலையில், வரும் 15ந்தேதி தொடங்கும் குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த மசோதாவை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதாவில் பிரிவு 52ன்படி, தீர்மானம் கழகத்துக்கு ஏராளமான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு வங்கியின் அடிப்படை கடமையைக் கூட ரத்து செய்யும் அதிகாரம் இதற்கு இருக்கிறது.

அதாவது, நாம் வங்கியில் வைத்திருக்கும் டெபாசிட் தொகையை, நாம் கேட்கும் போது உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்பது இப்போது வங்கிகளின் கடமையாகும்.

இனி அப்படி இருக்காது. அந்த உத்தரவாதத்தை ரத்து செய்வதற்கு தீர்மானம் கழகத்துக்கு (Resolution Corporation) இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. 

உதாரணமாக மகன்,மகளின் திருமணம், படிப்புச் செலவுக்காக ரூ.10 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்து இருப்போம். முதிர்காலம் முடிந்தபின், அந்த தொகையை திருப்பிக் கேட்டால், வங்கிகள் அதை முழுமையாக உடனடியாக கொடுக்க வேண்டியது கடமையாகும். ஆனால், தீர்மானம் கழகம் உத்தரவிட்டால், அந்த தொகையை வங்கிகள் முழுமையாக உடனடியாக வழங்க வேண்டிய அவசியம் இல்லை.

டெபாசிட் தொகையில், குறிப்பிட்ட பகுதியை வங்கி தனது மூலதனத்துக்கு எடுத்துக் கொள்ளும் அல்லது  கணக்கில் உள்ள பணத்தை டெபாசிட் தாரர்கள் அனுமதியின்றி, ஒப்புதலின்றி, கூடுதலாக 10 ஆண்டுகளுக்கோ அல்லது 20 ஆண்டுகளுக்கு டெபாசிட்டாகமாற்றிக்கொள்ளும். அதற்கு அப்போது நடப்பில் இருக்கும் பணவீக்கத்துக்கு ஏற்ப வட்டி தர தீர்மானம் கழகம் முடிவு எடுக்கும்.

அதாவது நம்முடைய சேமிப்பின் பகுதியை நம்முடைய அனுமதி இல்லாமல் வங்கிகள் எடுத்துக் கொண்டு, முழுமையாக உடனடி தேவைக்கு தராமலும் மறுக்கலாம். இது சட்டமாக நிறைவேறிவிட்டால், நீதிமன்றம் இதில் தலையிட முடியாது.

மகன், மகள் திருமணத்துக்காகவும், படிப்புச் செலவுக்காகவும், வீடு கட்டவும், நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் சேர்த்து வைத்த டெபாசிட் தொகையை முடக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

மேலும், இந்த சட்டத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில்,மூத்த குடிமக்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள், அவர்களின் டெபாசிட்களுக்குதான்அதிகமான ஆபத்து  ஏற்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here