ரத்தத்தை சுத்தம் செய்து வியாதிகளைப் போக்கும் நறுவலி!!

0
27

ரத்தத்தை சுத்தம் செய்து வியாதிகளைப் போக்கும் நறுவலி!!

சில மரங்கள் மருத்துவ பலன்கள் மிக்கவையாக இருந்தாலும், மரத்தின் மெய்யான பெயரை அறிந்திருக்க மாட்டார்கள். அவற்றின் வேறொரு பயனைக் கூறினால் அந்த மரத்தை எல்லோரும் உடனே அறிந்துகொள்வார்கள். அப்படி ஒரு மரம்தான், நறு வலி.
தலைமுடியை சிக்கெடுக்க, தலைமுடிகளில் அரிப்பை ஏற்படுத்தும் ஈறை, தலையில் இருந்து களைய, ஈருளி எனும் மரத்தாலான சீப்பு போன்ற ஒன்றைப் பயன்படுத்துவர். இதை பேன் சீப்பு என்றும் சொல்வார்கள். அந்த ஈருளி, நறு வலி மரத்தில் இருந்துதான் செய்யப்படுகிறது.
நீர்நிலைகள் மற்றும் நல்ல வளமான நிலப்பகுதிகளில் வளரும் நறு வலி மரங்கள் நெடு நெடுவென நூறடி வரை உயரமாக வளரக் கூடியவை. பலா மர இலைகளைப் போல சற்று நீண்ட உருண்டை வடிவத்தில் இலைகளைக் கொண்ட நறுவலி மரங்களின் மலர்கள் வெண்ணிறக் கொத்துக்களாக காணப்படும்.
இவற்றின் பழங்கள் சிறிய கோலிக்குண்டுகள் போல வெளிர் வண்ணத்தில் காணப்பட்டாலும், நன்கு பழுத்தவுடன் நாவல் பழம் போல, கரு வண்ணத்தில் காணப்படும்.
நறு வலியின் பயன்கள்
உடல் வெப்ப நிலையை சமநிலைப் படுத்தும் தன்மைமிக்கவை. உடலில் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள், கொழுப்புகளை நீக்கி, இரத்தத்தை சுத்திகரித்து, உடல் இயக்கத்தை, ஆற்றலை அதிகரிப்பதில் சிறப்பாக செயல்படும் தன்மை மிக்கவை.
ரத்தத்தை சுத்தம் செய்யும் 
துரித உணவுகள், கேக் மற்றும் பிரெட் வகைகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் சிலருக்கு, உடலில் உள்ள இரத்தத்தில் அந்த உணவுகளில் உள்ள கரையாத கொழுப்பு மற்றும் நச்சுக்கள் இரத்தத்தில் கலந்து, உடலின் சீரான இரத்த ஓட்டத்தை பாதித்து விடும்.
இதனால், இரத்த அழுத்தம் கூடுதலாகி, நடக்கும் போது, உடல் தளர்ந்து போகும், மனதில் கோப உணர்வுகள் அதிகம் மேலோங்கி எல்லோரிடமும் எரிந்து விழும் நிலைகளில் இருப்பார்கள், வேலைகளில் நாட்டமின்றி காணப்படுவார்கள். உடல் இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்கள் மற்றும் கொழுப்புகளால் ஏற்படும் இந்த பாதிப்புகளை சரிசெய்ய, நறு வலி இலைகள் மற்றும் பழங்கள் சிறந்த பலன்கள் தருகின்றன.
சளியை கரைக்கும் 
சளியைக் கரைத்து, இருமல், ஜலதோஷம், தொண்டை கட்டிக்கொள்வது போன்ற சுவாசக் கோளாறுகளை சரியாக்கி, வயிற்று சூடு, சிறுநீர்க் கடுப்பு போன்ற உடல் சூட்டினால் ஏற்படும் பித்த வியாதிகளை விலக்குவதில், வல்லமை உடையது.

வயிற்று நோய்களை குணமாக்கும் 

நறு வலியின் பழங்கள் மோசமான சரும வியாதிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் மிக்கவை.
இவை வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றி, உடலை வளமாக்கும், சிறுநீரை நன்கு வெளியேற்றி, உடலில் உள்ள வலி வேதனைகளை சரிசெய்து, உணவு சீரணம் சம்பந்தமான வயிற்று உறுப்புகளின் பாதிப்பைக் களைந்து, அவற்றை நல்ல முறையில் இயங்க வைக்கும் ஆற்றல் மிக்கவை.
நறு வலியின் இலைகள், மலர்கள், காய், பழங்கள் மற்றும் தண்டுகள் சிறந்த மருத்தவ நன்மைகள் தரக்கூடியவை.

நறு வலி இலைகளின் பயன்கள்

நறு வலை இலைகளை நன்கு உலர்த்தி அவற்றை இடித்து தூளாக்கி வைத்துக்கொண்டு, சிறிது தூளை ஒரு லிட்டர் தண்ணீரில் இட்டு காய்ச்சி, தண்ணீர் நன்கு கொதித்து. கால் லிட்டர் அளவு வந்ததும், அந்த நீரை சற்று ஆற வைத்து பின்னர் பருகி வர, சருமத்தில் உள்ள காயங்கள் மற்றும் நச்சுத் தொற்றுக்கள் விலகும், நெஞ்சில் உறைந்திருந்த சளி, கரைந்து, உடலில் இருந்து படிப்படியாக வெளியேறும். நறு வலி இலைகளை நன்கு சுத்தம் செய்தபின் அவற்றை சாறெடுத்து, மிளகு சேர்த்து சூடாக்கி, தேன் கலந்து தினமும் இரு வேளை பருகி வர, சுவாச பாதிப்புகளான நெஞ்சு சளி, ஜலதோஷம், இருமல், மூச்சிறைப்பு மற்றும் தொண்டை பாதிப்புகள் சரியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here