பலாப்பழச் சுளையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

0
27

பலாப்பழச் சுளையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

சாப்பிடுவதற்கு தித்திக்கும் சுவையை கொண்ட இந்த பழத்தின் விதைகளை சமையலில் கூட பயன்படுத்துகின்றனர்.
முப்பெரும் கனிகளில் ஒன்றாக இருக்கும் இப்பழம் சீசன் பழமும் கூட. கோடை காலத்தில் மட்டுமே உற்பத்தியாகிறது.
இதில் எண்ணற்ற ஆரோக்கியமான பொருட்களும் அடங்கியுள்ளது இதன் மிகச் சிறப்பு. இதில் சபோனின், லிக்னன்ஸ், பைப்டோ நியூட்ரியன்ஸ் மற்றும் ஜஸோப்ளோவோன்ஸ் போன்ற புற்றுநோயை எதிர்க்கும் பொருட்கள் இதில் அடங்கியுள்ளது. இந்த பொருட்கள் புற்று நோய்க்கு எதிராக செயல்பட்டு புற்று நோய் செல்களை அழிக்கிறது. பலாப்பழம் குடல், நுரையீரல் மற்றும் தொண்டை புற்று நோய் போன்றவை ஏற்படாமல் காக்கிறது.
ஆரோக்கியமான சருமம் பெற
இந்த பலாப்பழம் நமக்கு ஆரோக்கியமான அழகான பொலிவு நிறைந்த சருமத்தை கொடுக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமம் வயதாகுவதற்கு எதிராக செயல்படுகிறது.
சருமத்தில் உள்ள சுருக்கங்கள், பொலிவின்மை போன்றவற்றை போக்கி ஆரோக்கியமான சருமத்தை தருகிறது. சரும சுருக்கங்களை போக்க இந்த பலாப்பழத்தை குளிர்ந்த பாலில் ஊற வைத்து பேஸ்ட் மாதிரி அரைத்து தினமும் முகத்தில் தடவி ஒரு 6 வாரத்திற்கு செய்யும் போது சுருக்கங்கள் மறைந்துவிடும்.
மேலும் இதிலுள்ள நார்ச்சத்துகள் நமக்கு ஏற்படும் மலச்சிக்கலையும் களைகிறது. பொலிவான சருமம் கிடைக்க இந்த பழத்தின் விதைகளை தேனில் ஊற வைத்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி 5 நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும். இந்த முறையை தினமும் செய்யும் போது நல்ல மாற்றத்தை காணலாம்.
அதிக புரோட்டீன் சத்து
இந்த பலாப்பழத்தை தினமும் காலை அல்லது மதிய வேளை ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடும் போது இயற்கையாகவே பசியை தூண்டுகிறது. இதை சாலட் மாதிரியும் சாப்பிடலாம். இதிலுள்ள புரோட்டீன் சத்து உங்களுக்கு மிகுந்த நன்மைகளை அள்ளித் தருகிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துதல்
பலாப்பழத்தில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது உடலுக்கு ஒரு அரணாக செயல்பட்டு வைரஸ் கிருமி தொற்றிலிருந்து காக்கிறது. மேலும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற தொல்லையிலிருந்து நம்மை விடுவிக்கிறது. இதிலுள்ள பாலிசாக்ரைடுகள் நோயெதிர்ப்பு செல்களான போகோசைடிக் செயலுக்கு உதவுகிறது.
ஆற்றல் தருதல்
இதிலுள்ள புரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. இது கொழுப்பு இல்லாத கலோரி அதிகமான கார்போஹைட்ரேட் உணவாக இருப்பதால் உடலுக்கு மிகவும் சிறந்தது.
ஆஸ்துமாவிலிருந்து விடுபட உதவுதல்
தினமும் இந்த பழத்தை உண்டு வந்தால் சுவாச மண்டல பிரச்சினைகள் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது.
தைராய்டு சுரப்பை ஆரோக்கியமாக்குகிறது
தைராய்டு சுரப்பி ஒழுங்காக சுரக்கா விட்டால் நமக்கு ஏராளமான உடல் உபாதைகள் வரும். இந்த பலாப்பழத்தில் உள்ள காப்பர் போன்ற சில தாதுக்கள் தைராய்டு சுரப்பை ஆரோக்கியமாக்குகிறது. சரியான அளவில் தைராய்டு சுரப்பை ஏற்படுத்தி உடல் மெட்டா பாலிசத்தை சரியாக செயல்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here