கருப்பை பிரச்சனைகளைப் போக்கும் அசோகப் பட்டை சூரணம்!

0
43

கருப்பை பிரச்சனைகளைப் போக்கும் அசோகப் பட்டை சூரணம்!

அடர்ந்த வனங்களில் அதிகம் காணப்படும் மரங்களாக திகழும் அசோகமரம், நமது மாநிலத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சில இடங்களில் காணப்படுகின்றன. பழமையான மரமாதலால், அரிதாகக் காணப்படுகின்றன இந்த மரங்கள்.

அசோகமரங்கள் மிக அரிய பயன்களை பெண்களுக்குத் தரவல்லவை.  பெண்களின் உடல் நலம் காக்கும் தன்மைமிக்கவை.

பொதுவாக பேதி மற்றும் வயிற்றுப் போக்கு பாதிப்புகளை சரிசெய்யும், உடல் சூட்டில் ஏற்படும் பித்த வியாதிகள், சிறுநீரக சர்க்கரை பாதிப்புகள், இரத்த அழுத்த கோளாறுகள் மற்றும் பெண்களின் வெள்ளைப்படுதல், கருப்பை பாதிப்புகளை சரியாக்கும்.

தாய்மை பேறிற்கு :

அன்னை சீதாபிராட்டி, கொடிய சிறையில் வாடியபோது, அவள் வாட்டம் தணித்து, மனதில் நம்பிக்கை ஊட்டி, அவள் உயிரைக் காத்தது மட்டுமல்ல, அவளை துன்பங்கள் அதிகம் நெருங்காமல் காத்து நின்ற மரங்கள் தான், அசோகமரங்கள். அவை, மகளிரின் மனதை வாடவிடாமல் காக்கும் இயல்புமிக்கது. பெண்களின் மகப்பேறின்மைக்கு முதன்மை காரணமாக விளங்குவது, கருப்பை பாதிப்புகளே, அந்த பாதிப்புகளை சரியான முறையில் சரிசெய்கிறது, அசோகமரம்.

அசோகப்பட்டை சூரணம் :

சில பெண்களுக்கு கருப்பையில் வீக்கம் ஏற்பட்டு, அதனால் கரு உண்டாவதில் பாதிப்புகள் ஏற்படும். சிலருக்கு கருப்பையில் கட்டிகள் மற்றும் தேவையற்ற கொழுப்புகள் சேர்ந்து, உடல் நல பாதிப்புகளை, ஒழுங்கற்ற மாதாந்திர கோளாறுகளை ஏற்படுத்தும்.

சிலருக்கு, கருப்பை வலுவின்றி இருக்கும், இதனால் கரு தங்காமல் போய்விடும். இதுபோன்ற, பெண்களின் கரு வளம் சார்ந்த பாதிப்புகளுக்கு, சிறந்த நிவாரணியாக, நல்ல தீர்வாக அசோக மரப்பட்டைகள் விளங்குகின்றன. அசோக மருந்து, பெண்களின் பாதிப்புகளை சரியாக்கும்.

அசோகப்பட்டை மருந்து.

பெண்களுக்கு மாதாந்திர விலக்கின் போது, அதிகமாக உதிரப்போக்கு ஏற்படும், சிலரின் உடல்வாகு மற்றும் கருப்பை தொற்று, உடலின் வியாதி எதிர்ப்பு ஆற்றல் குறைவது போன்ற காரணங்களால், இரத்தப்போக்கு அதிகமாக இருக்கலாம்.

ஒழுங்கற்ற மாதாந்திர பாதிப்புகள் விலக :

பெண்களின் இயல்பான மாதாந்திர விலக்கு என்பது அவர்களின் ஆரோக்கியத்தை உணர்த்துவதாகும், இக்காலத்தில், உணவுகளில் கட்டுப்பாடுகள் இன்றி, கிடைக்கும் உணவை சாப்பிடும் கலாச்சாரம் பரவி விட்டது.

வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்துச் சென்று சாப்பிடும் தன்மைகள், தற்காலங்களில் மறைய ஆரம்பித்து விட்டன. சிலருக்கு காலை சிற்றுண்டி மதிய உணவு இரண்டுமே வெளியில்தான் என்பதை தவிர்க்க முடியாவிட்டாலும், மதிய உணவே சிற்றுண்டி போல, துரித உணவுகளாக அமைவது தான், வருந்தத் தக்கது.

இந்த செயல்கள் எல்லாம் பெண்களின் மாதாந்திர விலக்கின் சமயத்தில் அதிகம் பாதிப்பை அற்படுத்துகிறது. ஒழுங்கற்ற விலக்கின் காரணமாக, மன அழுத்தம், சோர்வு போன்றவை இயல்பைவிட அதிகம் ஏற்பட்டு, இந்த பாதிப்புகளே, உடல் அளவிலும் பலவீனத்தை உண்டாக்கிவிடுகிறது. இதுபோன்ற பாதிப்புகளைக் களைவதில், அசோகமரத்தின் பட்டைகளே, மீண்டும் கைகொடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here