பழைய ஒரு ரூபாய் நோட்டின் மதிப்பு ஒரு கோடி ரூபாயாம்…

0
38

பழைய ஒரு ரூபாய் நோட்டின் மதிப்பு ஒரு கோடி ரூபாயாம்… 

நாமெல்லாம் சிறு வயதில் அஞ்சல் தலைகளையும், சில நாணயங்களையும், ஒரு ரூபாய் ஐந்து ரூபாய் நோட்டுகளையும் சேர்த்து வைத்திருப்போம். விபரம் தெரியாத வயதில் ஏற்பட்ட இந்த பழக்கம், பின்னாளில் பல லட்சங்களில், கோடிகளில் வருமானம் தருகிறது. பழைய ஒரு ரூபாய் நோட்டு ஒன்றின் இன்றைய விலை பல கோடி ரூபாயை தாண்டும் என்றால் நம்பவா முடிகிறது? ஆம், நம்பித்தான் ஆக வேண்டும்.

ஒரு ரூபாய் நோட்டு:

ஒரு ரூபாய் நோட்டை அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்தி இத்துடன் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் பாருங்கள் இன்று அந்த ஒரு ரூபாய் நாட்டுக்கு மவுசு கூடியுள்ளது. பழமையான காசுகள், பொருட்களை சேகரிப்பவர்கள் இந்த ஒரு ரூபாயை எவ்வளவு தொகை கொடுத்து வாங்கவும் தயாராக இருக்கின்றனர். ஒரு ரூபாய் நோட்டுகளை புழக்கத்தின் விடுவதை மத்திய அரசு 1996ம் ஆண்டுடன் நிறுத்திவிட்டது என்றாலும், கடந்த ஐக்கிய முற்போக்கு அரசு ரிசர்வ் வங்கியை எதிர்த்து மீண்டும் அச்சிட்டு வெளியிட்டது. பிறகு சட்டச்சிக்கல்கள் காரணமாக மிகவும் குறைந்தளவு ஒரு ரூபாய் நோட்டுகளை மட்டும் வெளியிட்டுவிட்டு, பின்னர் நிறுத்திக்கொண்டது. இதே சமயத்தில் இந்த நோட்டுகளின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. காலப்போக்கில் ஒரு ரூபாய் மற்றும் இது போன்ற முடக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் அரியவகை பட்டியலில் சேர்ந்துவிட்டது. இதனால்தான் இவ்வகை ரூபாய் நோட்டுகள் ஏலங்களில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

ஏலத்திற்கு வரும் ரூபாய்கள்:

ebay என்ற இணைய விற்பனை தளம், இவ்வகை நோட்டுகளை அதிக விலைக்கு ஏலத்திற்கு விடுகிறது. பழைய ஒரு ரூபாய் நோட்டின் விலை ஐநூறு ரூபாய் வரை போகிறது. இதை வாங்க பெரிய கூட்டமே இணையதளத்தில் தவமிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் மத்திய அரசு வெறும் 1.9 லட்சம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்தது தான் இந்த நோட்டுகளுக்கு மவுசு கூடுவதற்கு காரணம். கவர்னர் கையெழுத்து, அச்சடிக்கப்பட்ட ஆண்டு என்ற பழைமை அளவீடுகளின் மூலம் ஒவ்வொரு ரூபாய் நோட்டுக்கும் விலை நிர்ணயிக்கப்படுகின்றன. ஒரு நோட்டு எவ்வளவு பழைமையோ அவ்வளவு அதிக தொகைக்கு ஏலத்தில் கேட்கப்படும்.

கவனம் தேவை:

ஒரு வேளை, இவ்வகை நோட்டுகளை நீங்கள் வாங்கினால், கண்ணை மூடிக்கொண்டு, இது பழைமையான கரன்சி என நம்பி வாங்கிவிடக் கூடாது. நீங்கள் நாணயத்தைப் பற்றி மிகவும் விவரம் தெரிந்தவராக இருக்க வேண்டும். இந்திய காகித பண துணைவி (Indian Paper Money Guide Book) 2014 என்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். இதன் உதவியுடன், ஏலத்திற்கு வரும் ரூபாய் நோட்டின் பழைமை குறித்து நீங்கள் விரிவாக தெரிந்துகொள்ளலாம். மெட்ராஸ் காயின் அசோசியேஷனால் வெளியிடப்பட்ட புத்தகம் இது. விஷயம் தெரியவில்லை என்றால், இந்த தொழிலில் நிறைய ஏமாற்றங்களை சந்திக்க வேண்டிஇருக்கும்.

கோடீஸ்வரர் ஆகலாம்:

1910ம் ஆண்டு ஜெர்மனி அரசு வெளியிட்ட கரன்சி நோட்டில் தமிழ் எழுத்துக்கள் பதிக்கப்பட்டிருக்கும். இந்த நோட்டு பெரிய அளவிலும், சதுர வடிவிலும் இருக்கும். இந்த கரன்சி நோட்டின் இன்றைய விலை பல கோடிகளை தாண்டும். இந்த வடிவில் ஒரே ஒரு ரூபாய் நோட்டு இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம். இந்தியாவை பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் ஆண்ட போது வெளியிடப்பட்ட கரன்சி ரூபாய் நோட்டுகள் இன்று இருபதாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை விற்கப்படுகின்றன. அதற்கு பிந்தைய, அதாவது விடுதலைக்குப் பின் சுதந்திர இந்தியாவில் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளும் பழைமைத் தன்மைக்கு ஏற்ப அதிக தொகைக்கு விற்கப்படுகின்றன.

உங்களிடம் இன்னும் பழைமையான ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா? உங்கள் வீட்டில் உள்ள பழைய இரும்புப் பெட்டிகளையும், மரப்பெட்டிகளையும் ஒரு அலசு அலசிப்பாருங்கள். நம் தாத்தா பாட்டிகள், பழைய ரூபாய் தாள்களை பத்திரப்படுத்தி வைத்திருக்கலாம். பழைய கரன்சி நோட்டுகளை இது போன்று ஏலங்களில் விட்டு, வருமானம் பார்க்கலாம். அல்லது பழைய நோட்டுகளை பத்திரப்படுத்தி, நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு பெருமையுடன் அளிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here