பிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக் குடும்பம்.. நாசா கண்டுபிடிப்பு!

0
64

பிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக் குடும்பம்.. நாசா கண்டுபிடிப்பு!

வாஷிங்க்டன்:

பிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக்குடும்பம் இருப்பதை நாசா விண்வெளி ஆய்வுக்கழகம் கண்டுபிடித்துள்ளது. மக்களின் நவீன கண்டுபிடிப்புகள் நாள்தோறும் பெருகிக்கொண்டே வருகிறது.

பூமியில் அரிய கண்டுபிடிப்புகளை அரங்கேற்றிய மனிதன் அண்டவெளியிலும் தனது ஆய்வை தொடங்கிவிட்டான். அதன் ஒருபகுதியாக மற்றொரு பூமி உள்ளதா வேற்றுக்கிரக வாசிகள் உள்ளனரா என்ற ஆய்வுகளை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக்கழகமான நாசா மேற்கொண்டு வருகிறது.

அண்மையில் பூமியை போன்ற பல கிரகங்கள் இருப்பதை கண்டுபிடித்தது நாசா.

நாசா கண்டுபிடிப்பு

இந்நிலையில் பிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக் குடும்பம் இருப்பதை நாசா விண்வெளி மையம் கண்டுபிடித்துள்ளது. நாசா மற்றும் கூகுளின் கெப்ளர் – 90 தொலைநோக்கி இந்த புதிய சூரியக்குடும்பத்தை கண்டுபிடித்துள்ளது.

சூரியக்குடும்பத்தில் 8 கோள்கள்

இந்த புதிய சூரியக்குடும்பம் 2,545 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந்த சூரியக்குடும்பத்தில் 8 கோள்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

14 நாட்களில் சுற்றுகிறது

இதில் பூமியைப் போலவே சூரியனில் இருந்து மூன்றாவதாக ஒரு கோள் உள்ளது. ஆனால் இது சூரியனை 14 நாட்களில் சுற்றிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

427 டிகிரி செல்சியஸ் வெப்பம்

சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் 427 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பெறுகிறது. நமது சூரியக்குடும்பம் 9 கிரகங்களை கொண்டுள்ளது.

செயற்கை நியூரல் நெட்வொர்க்

கடந்த 2006ஆம் ஆண்டு ப்ளுட்டோ கிரக அந்தஸ்தை இழந்தது. இந்நிலையில் இந்த புதிய உலகத்தை கண்டுபிடிப்பதற்கு ஒரு செயற்கை நியூரல் நெட்வொர்க் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here