மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை.. 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்

0
204

சென்னை: மேட்டூர் அணை குறுகிய காலத்தில் 2வது முறையாக நிரம்பியுள்ளது. அணைக்கு அபரிமிதமான தண்ணீர் வரத்து உள்ளதால் 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்திலிருந்து கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் லட்சம் கன அடி நீர் விநாடிக்கு வெளியாகிறது. இந்தத் தண்ணீர் தற்போது மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 80,000 கன அடி நீர் வெளியேறி வருகிறது.

சென்னை: தமிழகமே இப்போது ஜில் என்று ஆகிவிட்டது.

சில மாவட்டங்களில் கன மழை, சில மாவட்டங்களில் மெல்லிய சாரல்கள், சில மாவட்டங்களில் சிலுசிலு என தேகங்களை தொட்டு செல்லும் குளிர்காற்று… என மாநிலம் முழுவதும் ஒரே குளுகுளுதான்.

kerala ring afftcting tamil nadu

சூறையில் முறியும் மரங்கள்

அதேபோல க‌ன்‌னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கன மழை கொட்டியது. மலையோர பகுதிகள், கடலோர பகுதிகள் அணையின் நீர்பிடிப்பு பகுதிகள், என ஒரு இடம் விடாமல் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அதனால் பெரும்பாலான பகுதிகள் இங்கு வெள்ளக்காடாகவே மாறியுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது என்றாலும் சூறை காற்றினால் வாழை, தென்னை மரங்கள் முறிந்து முறிந்து விழுந்து வருகின்றன.

பேய்மழை அடுத்ததாக தேனி. இங்கு பெய்த மழையை பேய் மழை என்றுதான் சொல்ல வேண்டும். தேனி, பெரியகுளம், லட்சுமிபுரம், கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மரங்கள் எல்லாம் பிரதான சாலையில் விழுந்துவிடவும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வெகுவாகவே அவதிப்பட்டனர்.

சென்னையில் குளிர்ச்சி அதேபோல கோவை மாவட்டத்தை சுற்றிலும் மழைதான். ஏற்கனவே கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி வால்பாறை, உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை விடியற்காலையிலிருந்தே மழைதான். வண்டலூர், குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட புறநகரில் மழை பெய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here