மனித உடல்களின் ஊடே புகுந்து சென்று பார்க்க உதவும் புதிய கேமரா.!

0
105

 

மனித உடல்களின் ஊடே புகுந்து சென்று பார்க்க உதவும் புதிய கேமரா.!

மருத்துவத்தில் இப்போது வரும் அதிநவீன தொழில்நுட்பங்கள் பொறுத்தவரை மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, ஆனால் ஏழை எளிய மக்களுக்கு இந்த அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப பயன்பாடு எளிதாக கிடைக்காது. இதுவரை, மருத்துவத்தில் அதிகம் பயன்படும் எக்ஸ்-ரேஸ், விலை உயர்ந்த ஸ்கேன்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் அதிகம் இருந்தது. ஆனால் இப்போது வந்துள்ள புதிய கேமராவின் பயன்பாடு மிக அருமையாக உள்ளது.

 

தற்போது வந்துள்ள புதிய கேமரா எண்டோசுக்கோப்பின் நீண்ட வளைந்துகொடுக்கும் குழாயின் ஒளிரும் முனை போன்ற உட்புற ஆதாரங்களைக் கண்டறிவதன் மூலம் இயங்குகிறது. இதனால் எக்ஸ்-ரேஸ், விலை உயர்ந்த ஸ்கேன்கள் பயன்பாடு அதிகம் இருக்காது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எண்டோஸ்கோப்புகள்:

மனிதனின் உட்புற ஆய்வுகள் போது எண்டோஸ்கோப்புகள் என அழைக்கப்படுவதை டாக்டர்கள் கண்காணிக்க உதவ புதிய கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது நுரையீரல் நோய்களைக் கண்டறியும் மற்றும் சிகிச்சையளிக்க புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குகிறது

ஃபோட்டான்கள் :
இந்த புதிய கேமரா ஃபோட்டான்கள் என்று அழைக்கப்படும் தனிப்பட்ட துகள்களைக் கண்டறிந்து, திசு வழியாக ஒளி கடந்து செல்லும் சிறிய தடங்களைப் பிடிக்க முடியும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கேமரா உடலின் வழியாக வெளிச்சத்திற்கு எடுத்துச்செல்லப்படும் நேரத்தை பதிவு செய்யலாம், இதன் பொருள் சாதனம் எண்டோஸ்கோப் சரியாக எங்கு வேலை செய்ய முடியும் என்பதை கண்காணிக்கும்.
ஆராய்ச்சியாளர்கள்:
புதிய தொழில்நுட்ப கேமராவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள், எனவே நோயாளிகளுக்கு இவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் 20 சென்டிமீட்டர் திசுவின் மூலம் சாதாரண ஒளிச்சூழலின் கீழ் ஒரு புள்ளி ஒளி மூலத்தை கண்காணிக்கலாம்.

டாக்டர் மைக்கேல் டானர்:
ஹெராயிட்-வட் பல்கலைக்கழகத்தின் டாக்டர் மைக்கேல் டானர் தெரிவித்தது என்னவென்றால் நடைமுறையில் உடல்நல சவாலை புரிந்து கொள்ள மருத்துவருடன் இணைந்து பணியாற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் கோட்பாடுகள் அனைத்தும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here