தினமும் ஒரு உலர்ந்த அத்திப்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

0
40

தினமும் ஒரு உலர்ந்த அத்திப்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

உலர் அத்தியை பாலில் கலந்து ஜூஸ் போட்டு பருகலாம். மெல்லிய சுவையுடன் இருக்கும். இதனால் கிடைக்கும் நன்மைகளை இங்கு பார்க்கலாம்.

உலர் அத்தியில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது.

கலோரியும், கொழுப்பும் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இப்பழத்தை ஜூஸாக பருகலாம். பசியும் அடங்கும்.

அதிகளவு பொட்டாசியமும், குறைந்தளவு சோடியமும் கொண்டிருக்கும் பழம் என்பதால் உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும் வல்லமை வாய்ந்தது இப்பழம்.

விட்டமின் சி மற்றும் இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்தியை தினமும் உட்கொண்டு வருவோருக்கு ஆன்டி-ஆக்சிடன்ட் சத்துக்கள் வளமாக கிடைக்கும்.
இந்த ஆன்டி-ஆக்சிடன்ட் புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் வல்லமை வாய்ந்ததாகும்.

இரும்புசத்து நிறைந்த அத்திப்பழம் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகை ஏற்படுவதையும் தடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here