சிம்மம் : சனி பெயர்ச்சிப் பலன்கள் 2017

0
100

சிம்மம் : சனி பெயர்ச்சிப் பலன்கள் 2017

சிம்ம ராசி அன்பர்களுக்கு,

இது நாள் வரை “அர்த்தாஷ்டம சனியாக” இருந்து பல்வேறு வகையில் பாதிப்புகளை தந்து வந்த சனி பகவான், தற்போது பூர்வ புண்னிய ஸ்தானமான 5-ஆம் பாவத்திற்கு மாறி அமர்ந்து பலனை வழங்கப் போகிறார். கடந்த இரண்டரை ஆண்டு காலமாக சிம்ம ராசிக்காரர்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வந்தவர்கள் என்றால் மிகையில்லை. குடும்ப வாழ்வை புரட்டிப் போட்டிருக்கும். தற்போது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமரும் சனி பகவான் நன்மையை தருவாரா என ஏங்கி கிடப்பார்கள்.

இந்த சனி பெயர்ச்சியும் சிம்ம ராசிக் காரர்களுக்கு நன்மையைத் தரப் போவதில்லை.ஆனால் 5-ஆம் பாவம் என்பது வழிபாடும், பரிகாரமும், நேர்மையான வாழ்க்கையும் கடை பிடித்தால் சனி பகவானின் தீயப் பலன்களிலிருந்து விடுபட வழி உள்ளது.

5-ஆம் பாவம் என்பது தனம், புத்தி, புத்திர ஸ்தானமாதலால், வருவாய் தடைகளை உண்டு பண்ணும், சேர்த்து வைத்த சேமிப்பு கரையும், எந்த முயற்சியும் உடனடியாக முடிக்க இயலாமல் தடை மேல் தடையை சந்தித்து மனம் சலிப்புற்று விரக்தி தரும் .முடிவு எடுக்க இயலாமல் மனம் கலங்கி கிடக்கும். பிள்ளைகளால் மனசங்கடம் அதிகம் அனுபவிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உடல் நலம் கவலை தரும்.

புத்தியானது சரியாக செயல்படாது. எடுக்கும் முடிவுகள் தவறாக அமையும். ஆகவே பலமுறை யோசித்து செயல்பட வேண்டும். பூர்விக சொத்தில் வம்பு, வழக்கு,வில்லங்கம் வரும். இழக்கவும் வைக்கும், பாட்டன், தாய் மாமன் நிலை தாழ்வடையும்.சனி பகவான் 6-ஆம் பாவாதியாதலால் எதிரிகளால் வழக்கு வியாஜ்யங்களும்,நோயால் தொல்லைகளும், கடன் தொல்லைகளும் அடைவார். பொருளாதார சங்கடங்களைத் தரும்.

பெண்களுக்கு கருச் சிதைவு, பிள்ளைகளால் தொல்லையை அனுபவிப்பார்கள்.பிள்ளைகளுக்கு கல்வித்தடை உண்டாகும். ஆக மழை விட்டும் தூவானம் விடாத நிலைதான் சிம்ம ராசிக் காரர்களுக்கு.

இவர்களுக்குத்தான் பரிகாரம் முக்கியமாகத் தேவை படும். வருடம் ஒரு முறை திருநள்ளாறு சென்று தரிசித்து வரவும், குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளவும், ஸ்ரீ ருத்ர ஜெபமோ, விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணமோ தினசரி செய்து வர வேண்டும்.திருவாரூர் ருண விமோசன லிங்கேஸ்வரரை பௌர்ணமி தோறும் தரிசித்து வழிபடலாம். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் “ருண விமோசன ஸ்தோத்ரம்” தினசரி பாராயணம் செய்து வரலாம். சனிக் கிழமை ஒரு வேளை உணவு எடுத்து விரதம் இருத்தலும், காகத்திற்கு அன்னமிடுதலும், ஊனமுற்றோருக்கு உதவுதலும், சிறந்த பரிகாரமாகும் துன்பங்கள் குறையும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here