கர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்?

0
231

இந்த 4 அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் ஒன்றே போதும்..மேட்டூர்அணை இவைகளை விழுங்க..

காவேரி நீர் பிரச்சனை என்றாலே உடனே செய்திகளில் அடிபடுவது இந்த 4-அணைகள்தான்.

1. கபினி அணையின் கொள்ளளவு 15.67 டிஎம்சி..

2. ஹேமாவதி நீர் தேக்கத்தின் கொள்ளளவு 35.76 டிஎம்சி..

3.ஹேரங்கி அணையின் கொள்ளளவு 8.07 டிஎம்சி…

4. கிருஷ்ண ராஜசாகர் அணையின் கொள்ளளவு 45.05 டிம்சி..

-என ஆக மொத்தம் 105.55 டிஎம்சி தண்ணீர்…

இவ்வளவு தண்ணிரையும் ஒரே நேரத்தில் திறந்துவிட்டால் கூட (திறக்க வாய்பில்லை என்பது வேறு)

நம்ம மேட்டூர் நீர் தேக்கத்தால் 93.4 டிஎம்சி. நீரை, அதாவது 90 விழுக்காடு தண்ணீரை தேக்கி வைக்க இயலும்.

அதாவது ஒரு #TMC தண்ணீர் என்பது ‘One Thousand Million Cubic Feet’ அதாவது 100,00,00,000. எளிமையாக சொன்னால் 100 கோடி கன அடி நீர்..

ஒரு கனஅடி நீர் என்பது 28.3 லிட்டர். ஒரு டிஎம்சிக்கு 2,830 கோடி லிட்டர்.

அதாவது ஒரு #டிஎம்சி தண்ணீரை #பெப்சி கம்பெனிக்காரன் பாட்டிலில் அடைத்து, லிட்டர் 20 ரூபாய்க்கு விற்றான் என்றால்.. 56 ஆயிரத்து 600 கோடி ரூபாயை விற்று ஆட்டய போடலாம்..

அதே ஒரு டிஎம்சி தண்ணீரை #அம்மா பாட்டிலில் அடைத்து வைத்து விற்றால் 28 ஆயிரத்து 300 கோடி ரூபாயை தேத்தலாம்.

அதாவது நமது டாஸ்மாக்கின் ஒரு வருட வருவாய்.

அதே ஒரு TMC தண்ணீரை வைத்து சென்னை மாநகருக்கு 34 நாட்கள் குடிநீர் விநியோகம் செய்தால்,12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளில் சுமார் 24 லட்சம் லாரிகள் தேவைப்படும்.

இப்போது எளிதாக புரிந்ததா ஒரு TMC தண்ணீர் என்றால் எவ்வளவு என்று?

அடுத்தது அணைகளின் கொள்ளளவை பார்த்தோமெனறால்..

கர்நாடகத்தின் கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த உயரம் 124 அடி. 
அதன் தண்ணீர் கொள்ளளவோ 45.05 டிஎம்சி-மட்டுமே.

ஆனால் #மேட்டூர்_அணை-யின் உயரம் என்னவோ 120 அடி. ஆனால் அதன் கொள்ளளவோ 93.4 டிஎம்சி..

அதாவது கிருஷ்ண ராஜசாகர் அணையை காட்டிலும், நம்ம மேட்டூர் அணை இரண்டு மடங்கு கொள்ளவு உடையது…

மேட்டூரைப்போலவே 120 அடி உயரம் கொண்டது #பவானிசாகர்_அணை.

ஆனால் இதன் கொள்ளளவு 32.8 டிஎம்சி.. மூன்று பவானி சாகர்களை மேட்டூரில் வைக்கலாம்..

நம்ம #சாத்தனூர்_அணை 119 அடி உயரம். ஆனா கொள்ளளவு வெறும் 7.3 டிஎம்சி.

நிலைமை இப்படியிருக்க,

‘இத்தனை அடி தண்ணீர் ஏறியது, அத்தனை அடி ஏறுகிறது’

-என்று அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருப்பத்தில் முழு பொருள் உள்ளதா?

நமது மேட்டூர் அணைக்கே வருவோம்.

அதில் 50′ அடிக்கு தண்ணீர் இருந்தால் 18 டிஎம்சி..

75′ அடியை தொட்டால் 37 டிஎம்சி..

100′ அடி என்று சொல்வார்களே, அதைத்தொட்டாலே 60 டிஎம்சி தான் நீர் இருக்கும்..

ஆனால் அடுத்த 20 அடியை தொட 33 டிஎம்சி தண்ணீர் வேண்டும்.

அதாவது மேட்டூர் அணை 100-லிருந்து முழுமையான 120 அடிக்கு போக, ஒரு பவானி சாகர் அணைக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் தேவை.

அணை குறித்த செய்தி என்றால், எளியோருக்கும் புரிகிற மாதிரி இருக்க வேண்டும் அல்லவா?

‘எவ்வளவு நீர் வருகிறது, எவ்வளவு நீர் திறந்துவிடப்படுகிறது’ என்பதோடு..

‘அணையின் கொள்ளவு, நீர் எத்தனை விழுக்காடு இருக்கிறது’ என்று சொன்னால் எளிதில் புரிந்துவிடும்.

இன்று காலை (ஜூலை 17) பத்து மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94′.….

நீர் இருப்பு 54 டிஎம்சி… மொத்த கொள்ளளவில் இது 57-விழுக்காடு…

அதாவது மேட்டூர் அணை பாதிதான் நிரம்பியுள்ளது..

‘’120′ அடியில் 100′ அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர் மட்டம்’’ என்றால் அது பரபரப்பு..

100′ தொட்டாலும் அணை பாதிதான் நிரம்பியுள்ளது என்பது பரபரப்பில்லாத உண்மை.. அவ்வளவே…

#Thats_all_your_honour..

(இந்த பதிவு மூத்த ஊடகவியலாளர் திரு.ஏழுமலை வெங்கடேசன் அவர்களின் கட்டுரையில் வெளியான புள்ளி விபரங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. அவருக்கு நமது நன்றி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here